Tuesday, May 12, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

முகத்துல இந்த எண்ணெய தேய்ச்சுட்டு தூங்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

A
Admin User
Journalist
December 06, 2021 5 min read 122 views
முகத்துல இந்த எண்ணெய தேய்ச்சுட்டு தூங்குறதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

ஊரடங்கு முடிவில்லாமல் தொடரும் பட்சத்தில், இந்த கோடையில் சரும பராமரிப்பு பெரும் சவால் நிறைந்ததாகவே உள்ளது. வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து பல விதத்தில் சரும பராமரிப்பை நம்மால் சிறப்பாக செய்திட முடியும். ஆண்களை விட பெண்களுக்கு சற்று அக்கறை அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்து ஒன்று தான். அந்த வகையில், சமையறையில் உள்ள பொருட்களை வைத்து சருமம் மற்றும் கூந்தலில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திட முடியும். எனவே, இனி எந்த பணத்தை வீணாக கெமிக்கல் நிறைந்த பொருட்களில் செலவிட தேவையே இருக்காது.

வெறும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி மேஜிக் நிகழ்த்த முடியும். தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவிக்கொண்டு படுக்கவும். தொடர்ந்து இதனை செய்து வந்தால், பளபளப்பான, பொலிவுறும் சருமத்தை பெற்றிடலாம். தேங்காய் எண்ணெயில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. கொழுப்பு அமிலம் நிறைந்த தேங்காய் எண்ணெய் சருமத்தில் அற்புதத்தை நிகழ்த்திடும். வாருங்கள், தேங்காய் எண்ணெயின் நன்மைகள் மற்றும் அதனால் ஏற்படக்கூடும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்…

பாக்டீரியாவை கொல்லும்

தேங்காய் எண்ணெயில் உள்ள சாசுரேடட் கொழுப்பு, தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்ப்பு போராடும் திறன் கொண்டது. முகப்பரு, சரும தொற்றும் அல்லது ஃபோலிகுலிடிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இந்த எண்ணெய் தடுத்திடும்.

சரும அழற்சியை குறைத்திடும்

இந்த எண்ணெய் கடுமையான சரும பிரச்சனைகளான டெர்மடிடிஸ் மற்றும் எக்ஸீமா போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க உதவும். இதிலிருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வீக்கத்தைக் குறைத்து சருமத்தை அமைதிப்படுத்த உதவும்.

வறண்ட சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கும்

சாதாரண சருமம் முதல் மிகவும் வறண்ட சருமம் வரை, எல்லா வித சருமங்களுக்கும் தேங்காய் எண்ணெய் ஏற்றது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து, ஒட்டுமொத்த சருமத்தையும் மேம்படுத்திடும்.

காயங்களை குணப்படுத்தும்

சருமங்களில் ஏற்படக்கூடி சிறு சிறு காயங்களை கூட இந்த எண்ணெய் விரைந்து குணப்படுத்திடும். காயங்கள் இருக்கும் இடத்தில் இதனை தடவினால் சில நாட்களிலேயே காயம் இருந்த இடம் தெரியாமல் மறைந்திடும்.

இந்த எண்ணெயை இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, கைகளை கொண்டு மெதுவாக தேய்த்து மசாஜ் செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். மிகவும் மெல்லிய படலமாக எண்ணெய் தடவினால் போதுமானது. கண்களில் எரிச்சல் ஏற்படாமல் இருக்க, கண்களின் அருகே தடவுவதை தவிர்த்திடவும். இந்த எண்ணெய் எல்லா வகை சருமத்திற்கும் உகந்தது என்று கூறிட முடியாது. மென்மையான சருமம் அல்லது எண்ணெய் பசை சருமம் என்றால் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதனை செய்வதற்கு முன்பு, சிறிது சருமத்தில் தடவி பரிசோதித்து விட்டு பயன்படுத்துவது சிறந்தது.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,100
தங்கம் (24k)
1 கிராம்
₹14,805
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க