Sunday, August 23, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

இந்த 2 பொருட்களை யூஸ் பண்ணாலே போதும் உங்கள் சருமம் எப்போதும் ஜொலிக்கும்...

A
Admin User
Journalist
May 09, 2022 5 min read 185 views
இந்த 2 பொருட்களை யூஸ் பண்ணாலே போதும் உங்கள் சருமம் எப்போதும் ஜொலிக்கும்...

கோடைகால வெப்பத்தில் சரும பராமரிப்பு மிகவும் முக்கியமானது. கோடை வெயில், வியர்வை போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க, பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். என்ன தான் கடைகளில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தினால், அதனால் சிலருக்கு பக்க விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சுலபமான முறையில் நமது சருமத்தை பாதுகாத்திட முடியும் என்பதை பெரும்பாலான பெண்கள் மறந்துவிடுகின்றனர். இந்த கோடை காலத்தில் உங்கள் சருமம் எந்த பாதிப்பையும் அடையாமல் பாதுகாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியத்தை தான் இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்…

கற்றாழை

அழகு பராமரிப்பு என்று வந்தாலே சருமம் முதல் தலை வரை அனைத்திற்கும் முதன்மையான தீர்வு கற்றாழை. கற்றாழை ஜெல்லில் இயற்கையாகவே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அவை, சருமத்திற்கு ஊட்டமளிப்பதுடன், சருமத்தை உள்ளிருந்து சரிசெய்து, வெப்பம் நிறைந்த கோடைகாலத்திலும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

அரிசி தண்ணீர்

அரிசி ஊற வைத்த தண்ணீர் பலரும் அதன் அருமை தெரியாமல் கீழே ஊற்றுகிறார்கள். ஆனால், அரிசி தண்ணீர் இயற்கையாகவே சன்ஸ்கிரீனாக செயல்படுகிறது. அதுதவிர, கூந்தல் வளர்ச்சிக்கும் அது பெரிதும் உதவுகிறது. வெயில் காலத்தில் சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாது, வெயிலில் ஏற்படும் சூட்டு புண்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அரிசி தண்ணீரை தாராளமாக பயன்படுத்தலாம்.

கற்றாழை மற்றும் அரிசி தண்ணீர் கலவை தயாரிக்கும் முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்த அரிசி தண்ணீரை எடுத்து கொள்ளவும்.
  • அதில் ஒரு 1 அல்லது 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • தயாரித்த அந்த பேஸ்ட் கலவையை, முகத்தில் தடவுவதற்கு முன் முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
  • இப்படி செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகள் முகத்தின் உள்ளே போகாது.
  • பின்னர், அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு உலர விடவும்.
  • அதன் பிறகு சிறிது தண்ணீர் தொட்டு கைகளால் லேசாக மசாஜ் செய்து பின்னர், குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிடவும்.

நன்மைகள்

சருமத்தை அமைதியாக்கும்

கற்றாழை ஜெல் மற்றும் அரிசி தண்ணீர் இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து உபயோகிப்பதன் மூலம், உங்கள் சருமம் அமைதிப்படுத்த முடியும். கோடைக்காலத்தில் சருமத்தில் வரும் அதிகப்படியான வியர்வை, அரிப்பு போன்றவை சருமத்திற்கு எரிச்சலைத் தரும். இந்த ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்தினால், உங்கள் சருமம் சுத்தமாகி, உட்புறம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

இயற்கை சன்ஸ்கிரீன்

அரிசி தண்ணீருடன், கற்றாழை ஜெல் சேர்த்து பயன்படுத்துவது இயற்கையான சன்ஸ்கிரீனாக செயல்படுகிறது. உண்மையில், அவற்றில் உள்ள மருத்துவ பண்புகள் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. சருமத்தை வெயிலால் கருமையாவதில் இருந்து தவித்து, எப்போதும் பொலிவாக வைத்திருக்க உதவிடும். இந்த ஃபேஸ் மாஸ்கை வாரத்திற்கு இரண்டு முறை செயத வரலாம்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,950
தங்கம் (24k)
1 கிராம்
₹15,698
வெள்ளி
1 கிராம்
₹270
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுக்கிறீர்களா?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க