Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

பால் கூட இத சேர்த்து யூஸ் பண்ணி பாருங்க நாள்பட்ட கருவளையமும் உடனே மறைஞ்சுடும்...

A
Admin User
Journalist
May 12, 2022 5 min read 87 views
பால் கூட இத சேர்த்து யூஸ் பண்ணி பாருங்க நாள்பட்ட கருவளையமும் உடனே மறைஞ்சுடும்...

இன்றைய காலக்கட்டத்தில் மாறுபட்ட வாழ்க்கை முறை, போதுமான தூக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவுகள், நீண்ட நேரம் மொபைல், கம்ப்யூட்டர் பார்ப்பது போன்ற காரணங்களால் கண்களுக்குக் கீழே கருவளையம் உருவாகிறது. இந்த கருவளையம் ஒருவரது அழகைக் கெடுக்கும் விதமாக அமைவதால், அதை உடனே மறைய செய்ய முயன்ற அனைத்தையுமே செய்து பார்ப்பவர்கள் உண்டு. பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இந்த பிரச்சனை அதிகமாகவே இருப்பதை பார்க்க முடிகிறது. கண்களுக்குக் கீழே கருவளையங்கள் இருப்பது, ஒருவரை சோர்வாகவும் வயதானவராகவும் காட்டும். அதுமட்டுமில்லாமல், அதுவும் எளிதில் போகவும் போகாது. ஒருவேளை, உங்களுக்கும் கருவளையம் பிரச்சனை இருந்தால், பாலைப் பயன்படுத்துங்கள். ஏனெனில், பால் கருவளையத்தைப் போக்குவதில் மிகவும் நன்மை பயக்கும். இது சருமத்தை ஒளிரச் செய்யும் தன்மை கொண்டது. சரி இப்போது இந்த கட்டுரையில், பாலை எந்தெந்த வழிகளில் கருவளையத்திற்கு மருந்தாக பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்…

உருளைக்கிழங்கு சாறு மற்றும் பால்

முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து துருவிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, துருவிய உருளைக்கிழங்கை ஒரு வடிகட்டியில் போட்டு அழுத்தி சாறு எடுத்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாற்றை எடுத்து, அதை சம அளவு குளிர்ந்த பாலில் கலந்து கொள்ளவும். அதன் பிறகு, சிறு பஞ்சு உருண்டையை எடுத்து அந்த கலவையைத் தொட்டு கண்களுக்குக் கீழே தேய்க்கவும். இதை சுமார் 15-20 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் தண்ணீரில் கழுவிடவும். நீங்கள் இதை தினமும் செய்து வந்தால் 3 நாட்களில் கருவளையம் மறைந்திருப்பதை பார்க்க முடியும்.

குளிர்ந்த பால்

முதலில் ஒரு சிறு கிண்ணத்தில் சிறிது குளிர்ச்சியான பாலை எடுத்து கொள்ளவும். அதில் இரண்டு பஞ்சு உருண்டைகளை ஊற வைக்கவும். இப்போது இவற்றை எடுத்து கண்களுக்கு கீழ் கருவளையம் உள்ள இடங்களை மறைக்கும் வகையில் வைக்கவும். 20 நிமிடங்கள் அவற்றை அப்படியே வைத்துவிட்டு, பின்னர் எடுத்திடவும். இறுதியாக குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிடவும், தினமும் மூன்று முறை இப்படி செய்து வர நல்ல வித்தியாசத்தைப் பார்க்கலாம்.

ரோஸ் வாட்டர் மற்றும் பால்

குளிர்ந்த பால் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் சம அளவில் எடுத்து கலந்து கொள்ளவும். இப்போது இந்த கலவையில் இரண்டு பஞ்சு உருண்டைகளை ஊற வைக்கவும். அதன் பிறகு, அவற்றை உங்கள் கண்களுக்கு மே வைக்கவும். கரு வளையம் முழுவதுமாக மறையும் படி இதனை கண்களின் மேலே வைக்கவும். 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். கருவளையங்களை நீக்க ரோஸ்வாட்டரை பாலுடன் கலந்து வாரத்திற்கு 3 முறை இந்த முறையை செய்து வரவும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க