கோடைகாலத்தில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் அல்ல. அதிலும், இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வேலைகள் கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றின் உபயோகத்தை மையமாக கொண்டே செயல்படுகின்றன. சூரியனை போலவே, நாம் அன்றாட வாழவில் நீண்ட நேரம் உபயோகிக்கக்கூடிய மடிக்கணினிகள் அல்லது தொலைபேசிகள் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களிலிருந்தும் புறஊதாக்கதிர்கள் வெளிப்படக்கூடும். இத்தகைய, புற ஊதா கதிர்கள் நீல கதிர்வீச்சு என்று அழைக்கப்படுகின்றன. மேலும், அவை நமது சருமத்திற்கும், கண் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். இதில் இருந்து உங்களைக் காப்பாற்றி கொள்வதற்கான வழிமுறையை தான் இப்போது இந்த கட்டுரையில் கொடுத்துள்ளேன். புறஊதாக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க விரும்பினால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள். இவற்றை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் சருமத்தையும், கண்களின் ஆரோக்கியத்தையும் சிறப்பாக கவனித்துக் கொள்ள முடியும்…
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சரும பராமரிப்பில் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் தொடர்ந்து லேப்டாப் அல்லது போன் பயன்படுத்துபவராக இருந்தால், புற ஊதா அலைகளால் உங்கள் சருமம் பாதிப்பிற்குள்ளாகும். அவற்றை நீங்களே நேரடியாக உணர்ந்தால், தினமும் சுத்தமான தேங்காய் எண்ணெயை உங்கள் சருமத்தில் தடவலாம்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தி உங்களது சருமத்தில் மசாஜ் செய்வது மூலம், சருமத்தின் நிறமானது மேம்படும் என்று கூறப்படுகிறது. உண்மையில், சூரியன் மற்றும் புற ஊதா கதிர்களால் சேதமடைந்த மற்றும் கருமையான உங்களது சருமத்தை சரிசெய்ய வைட்டமின் ஈ கொண்ட பாதாம் எண்ணெயைப் பயன்படுத்துவது சிறந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, நீங்கள் வெயிலில் அழைந்து திரிந்து வேலை செய்பவராக இருந்தால், பாதாம் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஆலிவ் ஆயில் சருமத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்குமே நன்மை பயக்கும். ஆரோக்கிய நன்மைகளுக்கு மட்டுமின்றி, இது நமது சருமத்தையும் களங்கமற்றதாக மாற்றும் என்று சொல்லலாம். மாசற்ற தூய சருமத்தைப் பெற வேண்டுமெனில், தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு உங்களது முகம் மற்றும் கைகளில் ஆலிவ் ஆயிலை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த எண்ணெயை பாதாங்களில் தடவுவதால், பாதங்களும் மிருதுவாக மாறிடும்.
டீ ட்ரீ ஆயில்
டீ ட்ரீ ஆயிலில் ஆண்டிசெப்டிக் பண்புகள் சருமத்தை உள்ளிருந்து சரிசெய்து, பளபளக்கச் செய்கிறது. அதுதவிர, தோலின் நிறத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, உடலில் ஏற்படும் அரிப்பு, பூஞ்சை தொற்று மற்றும் பாக்டீரியாவை அகற்றுவதிலும் டீ ட்ரீ ஆயில் சிறந்ததாக கருதப்படுகிறது.