Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

அடர்த்தியான கூந்தலைப் பெற மோரை இப்படி பயன்படுத்தி பாருங்கள்...

A
Admin User
Journalist
February 18, 2022 1 min read 23 views
அடர்த்தியான கூந்தலைப் பெற மோரை இப்படி பயன்படுத்தி பாருங்கள்...

இன்றைய மாசடைந்த சூழலில் தலை முடி உதிர்வு பிரச்சனை அநேகருக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகி விட்டது. மாசடைந்த காற்றி, நீர், தூசு போன்றவற்றால் கூந்தல் வலுவிழந்து உதிரக்கூடும். இதனால் பலர் கவலை கொள்கின்றனர். முடி உதிர்வது மட்டுமின்றி, அதன் பளபளப்பும் இழந்து ஆரோக்கியமற்றதாக காட்சியளிப்பது தான் பெண்களின் பெரும் கவலையாகவே உள்ளது. அத்தகைய சூழலில் கூந்தலுக்கு இழந்த போஷாக்கைத் திருப்பி தரவும், அடர்த்தியாக மாற்றவும் விரும்பினால் நீங்கள் மோரைப் பயன்படுத்துங்கள். எத்தனை வழிமுறைகளைப் பின்பற்றியும் பலனளிக்கவில்லை என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள முறையை தாராளமாக முயற்சித்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் அளிக்கும். வாருங்கள், இப்போது மோரை கூந்தலுக்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்…

மோர் பயன்படுத்துவது எப்படி?

முடி ஆரோக்கியமாக இருக்க மோர் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கூந்தலுக்கு ஊட்டமளிக்க, மோரை பயன்படுத்தி முடியைக் கழுவலாம். அதற்கு ஒரு பாத்திரத்தில் மோர் எடுத்து, அதனை ஒரு பஞ்சு உருண்டையில் தொட்டு, முடியின் வேர்க்கால்களில் படும்படி மோரைத் தடவவும். பின்னர், 30 நிமிடங்களுக்குப் பிறகு முடியை அலசிடவும். இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்து வரவும்.

மோர் மற்றும் எலுமிச்சை

லாக்டிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை மோரில் அதிகம் காணப்படுகின்றன. இது முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முடிக்கு ஊட்டமளிக்க மோர் மற்றும் எலுமிச்சையைப் பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்த, ஒரு கிண்ணத்தில் மோரை எடுத்து அதில் எலுமிச்சைச் சாற்றைக் கலக்கவும். அதன் பிறகு இந்தக் கலவையைப் பயன்படுத்தி முடியில் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த 20 நிமிடங்களுக்குப் பிறகு கூந்தலை அலசிடவும்.

மோர் ஹேர் மாஸ்க்

மோர் ஹேர் மாஸ்க் செய்ய, ஒரு கிண்ணத்தில் மோரை எடுத்து, அத்துடன் 3 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு முட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது இந்த கலவையில் வாழைப்பழத்தை சேர்த்து, நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும். அதன் பிறகு இந்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவவும். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு முடியை அலசிடவும். வாரத்தில் ஒரு முறை இதைச் செய்யுங்கள். நிச்சயம் நல்ல வித்தியாசத்தை உணரலாம்.

DSC Lava Kashmir Willow Short Handle Cricket Bat, Size - Mens
Recommended for You
DSC Lava Kashmir Willow Short Handle Cricket Bat, Size - Mens

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க