Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

கண் இமைகளில் முடி அடர்த்தியா, நீளமா வளர இதை செய்யுங்க போதும்...

A
Admin User
Journalist
January 21, 2022 1 min read 22 views
கண் இமைகளில் முடி அடர்த்தியா, நீளமா வளர இதை செய்யுங்க போதும்...

முகத்திற்கு கூடுதல் அழகு சேர்ப்பதே கண்கள் தான். அதிலும், கண்களின் இமைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எல்லாருக்கு கண் இமைகள் நீளமாக இருக்க வேண்டும் என்று விரும்பி பொய்யான இமை முடிகளை ஒட்டி கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில, கண்களில் அழகை மேலும் கூட்ட அதன் இமைகள் அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேறு என்னென்ன வழிகள் உணடு என்று தேடிவதும் உண்டு. அதற்காக நிறைய பணம் செலவு செய்ய வேண்டாம், எங்கும் அலைய வேண்டாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்தும், சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தியும் கண் இமைகளின் முடிவை அடர்த்தியாகவும், நீளமாகவும் மாற்றிடலாம். இந்த கட்டுரையில் அதைப் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த குறிப்புகளை முறையாக பின்பற்றினால் நீங்களும் பிறரை கவரும் கண்களைப் பெற்றிடலாம்.

ஆலிவ் மற்றும் ஆமணக்கு எண்ணெய்

இதற்கு, ஒன்று அல்லது இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெயில் ஒன்று அல்லது இரண்டு துளிகள் ஆமணக்கு எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது, அந்த எண்ணெயை உங்கள் கண் இமைகளில் ஒரு மஸ்காரா பிரஷ் பயன்படுத்தி தடவவும். இரவு தூங்கும் முன்பு இதை செய்துவிட்டு, காலையில் எழுந்ததும் கண்களை நன்றாக கழுவிடுங்கள்.

பெட்ரோலியம் ஜெல்லி

இரவில் தூங்குவதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியை கண் இமைகளில் தடவி கொள்ளவும். அதிகம் தடவாமல் அளவாக பார்த்து தடவி கொள்ளவும். பின்னர், காலையில் எழுந்து கண்களைக் கழுவிடவும். இதனால், கண் இமை முடி வேகமாக வளரும்.

எலுமிச்சை தோல்

எலுமிச்சை தோலை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதன் பிறகு பாதி கிண்ணத்தில் ஆலிவ் அல்லது ஆமணக்கு எண்ணெய் எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள எலுமிச்சை தோலை போட்டு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மூடி வைக்கவும். அதன் பிறகு, அந்த எண்ணெயை ஒரு மஸ்காரா பிரஷ் உதவியுடன், ஒவ்வொரு நாள் இரவு தூங்கும் முன்பு கண் இமைகளில் தடவவும். பின்னர் காலையில் எழுந்ததும் குளிர்ந்த நீரில் கண்களைக் கழுவிடவும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ இலைகளை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, தண்ணீர் ஆறிய பிறகு அதில் சிறிது பஞ்சை எடுத்து ஊற வைக்கவும். அதன் பிறகு பஞ்சின் உதவியுடன் கண் இமைகளில் அந்த நீரைத் தடவவும். இதை தினமும் இரவில் தூங்கும் முன்பு செய்யுங்கள். அதே நேரத்தில், மீதமுள்ள கலவையை மூடி வைத்து அடுத்த நாளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

கற்றாழை ஜெல்

தினமும் இரவு தூங்கும் முன்பு கண் இமைகளில் கற்றாழை ஜெல்லை மஸ்காரா ப்ரஷ் உதவியுடன் தடவவும். அதன் பிறகு இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் எழுந்து கண்களை நன்றாகக் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் கண் இமைகள் அடர்த்தியாகவும் அழகாகவும் மாறும்.

தேங்காய் பால்

சிறிது பஞ்சு உருண்டையை எடுத்து அதை தேங்காய் பாலில் சிறிது ஊறவைத்து கொள்ளவும். சிறிது நேரம் கழித்து அந்த பஞ்சை எடுத்து கண் இமைகளில் தடவவும். இதை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. பத்து நிமிடம் ஊற வைத்தால் போதுமானது. பின்னர், குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிடவும்.

pTron Newly Launched Fusion Tunes 10W Mini Bluetooth Speaker with Wireless Karaoke Mic, 8Hrs Playtime, Vivid RGB Lights, Voice Effects
Recommended for You
pTron Newly Launched Fusion Tunes 10W Mini Bluetooth Speaker with Wireless Karaoke Mic, 8Hrs Playtime, Vivid RGB Lights, Voice Effects

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க