Friday, August 07, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

ரம்ஜான் ஸ்பெஷல்: முகலாய் மட்டன் மசாலா!!!

A
Admin User
Journalist
April 30, 2022 5 min read 178 views
ரம்ஜான் ஸ்பெஷல்: முகலாய் மட்டன் மசாலா!!!

ரம்ஜான் நெருங்கிவிட்டது. இந்த ரம்ஜானுக்கு ஏதாவது வித்தியாசமான மட்டன் ரெசிபி செய்ய வேண்டுமென நினைக்கிறீர்களா? அப்படியெனில், முகலாய் ஸ்டைல் மட்டன் மசாலா செய்து அசத்துங்கள். இது பிரியாணி, சாதம் மற்றும் சப்பாத்தி ஆகியவற்றிற்கு அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும். சரி வாருங்கள், முகலாய் மட்டன் மசாலா எப்படி செய்வதென்று இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்…

தேவையான பொருட்கள்:

  • மட்டன் - 1/2 கிலோ
  • உப்பு - சுவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மசாலாவிற்கு…

  • வெங்காயம் - 2 (நறுக்கியது)
  • கறிவேப்பிலை - சிறிது
  • பச்சை மிளகாய் - 2 (கீறியது)
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
  • தக்காளி - 3 (அரைத்தது)
  • மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
  • சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 2 டீஸ்பூன்
  • முந்திரி - 50 கிராம்
  • கொத்தமல்லி - ஒரு கையளவு (நறுக்கியது)
  • உப்பு - சுவைக்கேற்ப
  • தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு…

  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • நெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • பட்டை - 1 சிறிய துண்டு
  • ஏலக்காய் - 5
  • கிராம்பு - 4

செய்முறை:

  • முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி சுத்தம் செய்த மட்டன், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட்டு, குக்கரை மூடி 5 விசில் விட்டு, குறைத்து தீயில் அடுப்பை 15 நிமிடங்களுக்கு வைத்து மட்டனை வேக விடவும். பின்னர், குக்கர் விசில் போனதும் குக்கரைத் திறந்திடவும்.
  • பின் ஒரு பௌலில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் முந்திரியைப் போட்டு 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின்னர் மிக்சர் ஜாரில் மென்மையாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • அடுத்ததாக, ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு தேவையான பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்.
  • பின்பு அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • அத்துடன், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • வதங்கியதும், அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வேக விடவும்.
  • அடுத்து அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • பின்பு அதில் வேக வைத்துள்ள மட்டனை தண்ணீருடன் சேர்த்து ஊற்றி கிளறி, குறைவான தீயில் அடுப்பை வைத்து சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
  • அடுத்ததாக, அரைத்த முந்திரியை சேர்த்து கிளறி, குறைவான தீயில் 15-20 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைத்து, கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கினால், சுவையான முகலாய் மட்டன் மசாலா பரிமாற தயார்.

Image Courtesy: yummytummyaarthi

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,750
தங்கம் (24k)
1 கிராம்
₹14,438
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க