Monday, August 24, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

காரசாரமான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்!!!

A
Admin User
Journalist
March 18, 2022 4 min read 180 views
காரசாரமான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்!!!

சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் மற்றும் பிற கலவை சாதங்களுக்கு ஏற்ற எளிமையான சைடு டிஸ் தான் இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவல். இதை சுலபமாக செய்திடலாம். அதிலும், லஞ்ச் பாக்ஸ் உணவுகளுக்கு ஏற்ற சைடு டிஷ். உருளைக்கிழங்கு வேண்டாம் என்று யாராவது சொல்லுவார்களா? இனி வாரத்தில் ஒரு முறை உருளைக்கிழங்கை இப்படி செய்து கொடுங்கள், அசைவ உணவு கூட அதனிடம் தோற்று விடும். சரி இப்போது உருளைக்கிழங்கு மிளகு வறுவல் எப்படி செய்வதென்று பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3
வர மிளகாய் - 2
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை

  • முதலில், உருளைக்கிழங்குகளை நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நீர் ஊற்றி சூடானதும் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  • அடுத்ததாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானது, அதில் வர மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து வறுத்து எடுத்து ஆற வைத்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
  • இப்போது அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேக வைத்து எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
  • பின்னர், அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட்டு மிதமான தீயில் நன்கு வேக விடவும்.
  • உருளைக்கிழங்கை முக்கால் பதத்தில் வேக வைத்து எடுத்தால் தான் உருளைக்கிழங்கை தாளித்து கிளறும் போது உடையாமல் இருக்கும்.
  • மசாலா உருளைக்கிழங்கில் நன்கு இறங்கும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான, காரசாரமான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் தயார்…
Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,950
தங்கம் (24k)
1 கிராம்
₹15,698
வெள்ளி
1 கிராம்
₹270
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க