Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
பயணம்

உலகில் இயக்கப்படும் மிக விலையுயர்ந்த 5 ரயில் பயணங்களின் பட்டியல்!!!

A
Admin User
Journalist
February 24, 2022 1 min read 35 views
உலகில் இயக்கப்படும் மிக விலையுயர்ந்த 5 ரயில் பயணங்களின் பட்டியல்!!!

உலகில் வாழும் மக்களில் பலர் ரயில் பயணத்தை பெரிதும் விரும்புகிறார்கள். அதிலும், ஒரு ஆர்வமுள்ள பயணியால் மட்டுமே ரயிலின் அழகையும் அதன் பயணத்தின் அழகையும் புரிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில், மற்ற பயணங்களைக் காட்டிலும் ரயில் பயணம் தான் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதையே தேர்ந்தெடுக்கின்றனரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஏனெனில் இது தான் பிற பயண கட்டணங்களைக் காட்டிலும் மலிவானது. ஆனால், இதற்கு நேர்மாறாக அதிக விலை கொடுத்து ரயிலில் பயணம் செய்ய விரும்புவோரும் இருக்கின்றனர். அதற்கு காரணம் அந்த ரயிலின் சிறப்பு வடிவமைப்பு, உட்கட்டமைப்பு போன்ற பிற வசதிகள் தான். அந்த வகையில், உலகில் இருக்கக்கூடிய விலையுயர்ந்த 5 ரயில் பயணங்களைப் பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்…

மஹாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில், இந்தியா

இந்தியாவில் ஓடக் கூடிய இந்த ரயிலில் பயணம் செய்வதன் மூலம் நீங்கள் உங்களை ஒரு ராஜாவாகவோ அல்லது ராணியாகவோ நினைத்து கொள்ளலாம். அப்படி இருக்கும் இந்த ரயிலின் தோற்றம். மன்னர் காலத்து பழங்கால அழகு வடிவமைப்புகளுடன் கூடிய இந்த ரயிலில் ஒரு முறையேனும் பயணம் செய்திட வேண்டும். அப்படிப்பட்ட தோற்றத்தை கொண்டது தான் மஹாராஜா எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில். இந்தியாவில் இருக்கக்கூடிய மிகச்சிறந்த சொகுசு ரயில் என்று கூட இதை சொல்லலாம். இதில் பயணம் செய்வது அப்படியொரு அற்புதமான பயண அனுபவத்தை நமக்கு வழங்குகிறது. இதனாலேயே இதன் விலை அதிகமாக இருக்கிறது.

வெனிஸ் சிம்ப்லான் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ், ஐரோப்பா

வெனிஸ் சிம்ப்ளான் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் (VSOE) உலகின் மிக விலையுயர்ந்த ரயில் பயணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆம், இந்த ரயில் மூலம் ஐரோப்பாவின் மிக முக்கிய இடங்களுக்குப் பயணிக்கலாம். இந்த ரயில் பாரிஸ்-இஸ்தான்புல் மற்றும் இஸ்தான்புல்-வெனிஸ் இடையே 6 பகல்/5 இரவு சுற்றுப்பயண தொகுப்புகளை வழங்குகிறது. இதனுடன், இந்த ரயிலில் 17 சூப்பர் ஸ்டைலிஷ் பெட்டிகள், கேபின் சூட்கள் மற்றும் இரட்டை கேபின்களும் உள்ளன. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அதைத் தவறவிடாமல் சென்று வாருங்கள்.

ராயல் ஸ்காட்ஸ்மேன், யுகே

ராயல் ஸ்காட்ஸ்மேன் ரயிலானது ஓரியன்ட்-எக்ஸ்பிரஸ் ஹோட்டல்களால் இயக்கப்படுகிறது. ராயல் ஸ்காட்ஸ்மேன் யுகே முழுவதும் பயணம் செய்ய 8 பகல்கள்/7 இரவுகள் ஆகும். இந்த சொகுசு ரயிலில் இருக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அதாவது ஒரே நேரத்தில் இந்த ரயிலில் 36 விருந்தினர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த காரணத்திற்காக, முன்கூட்டியே இந்த ரயிலுக்கான முன்பதிவைச் செய்வது மிகவும் முக்கியமானது. ஒருவேளை நீங்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய போகிறீர்கள் என்றால் முன்கூட்டியே முன்பதிவு செய்துவிடுங்கள்.

ரோவோஸ் ரயில் ப்ரைட் ஆஃப் ஆப்ரிக்கா, தென்னாப்ரிக்கா

தெற்கு ஆப்ரிக்காவில் இயக்கப்படக்கூடிய Rovos Rail Pride of Africa சொகுசு ரயில்களில் ஒன்றாகும். மேலும் இது கேப் டவுனில் இருந்து கெய்ரோவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் பிரிட்டோரியா மற்றும் கேப் டவுன் இடையே இயக்கப்படும். மேலும். இந்த ரயிலில் 72 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். ராயல் சூட்ஸ், டீலக்ஸ் சூட்ஸ் மற்றும் புல்மேன் சூட்ஸ் வகைகளில் தங்குமிட வசதிகளை வழங்கும் உலகின் மிக விலையுயர்ந்த ரயில் பயணங்களில் இந்த ரயிலும் ஒன்றாகும்.

பேலஸ் ஆன் வீல்ஸ், இந்தியா

பேலஸ் ஆன் வீல்ஸ் என்பது இந்தியாவின் மற்றொரு சொகுசு ரயிலாகும். இந்த ரயிலில் ஆடம்பரமான குளியலறை மற்றும் தூங்கும் வசதிகள் உள்ளன. இது மட்டுமின்றி இதில் வழங்கப்படும் உணவும் அற்புதமானது! இந்த ரயில் பயணமும் மிகவும் விலை உயர்ந்தது.

VINCENT CHASE EYEWEAR By Lenskart | Full Rim Round Sunglasses| Polarized And 100% UV Protected | Men & Women
Recommended for You
VINCENT CHASE EYEWEAR By Lenskart | Full Rim Round Sunglasses| Polarized And 100% UV Protected | Men & Women

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்கள்: குறைந்த செலவில் ஒரு சொர்க்கப் பயணம்!
வாசிக்க