கோடை வந்தாலே விடுமுறை வந்தாச்சுனு அர்த்தம். சரி நீங்கள் எந்த ஊருக்கு கோடைவிடுமுறைக்கு போக ப்ளான் பண்ணிருகீங்க? ஒருவேளை நீங்கள் இன்னும் எந்த ப்ளானும் செய்யவில்லை என்றால் இந்த கட்டுரை உங்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும். எப்படி என்று கேட்கிறீர்களா? இந்த கட்டுரையில் மிக குறைந்த பட்ஜெட்டில் கோடை விடுமுறையை கழிக்க ஏற்ற அற்புதமான இடங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் மனதிற்கு பிடித்தமான இடமாக இருந்தால் கோடை வெயிலிலும் உல்லாசமாக பொழுதை கழிக்கலாம். சரி, வாருங்கள் எந்தெந்த இடங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்பதை பார்க்கலாம்…

கூர்க் (Coorg)
கூர்க், அதிகாரப்பூர்வமாக குடகு என்று அழைக்கப்படுகிறது. இது கர்நாடகாவின் மிகவும் ரம்மியமான மலைபிரதேசமாகும். இது அதன் கவர்ச்சியான இயற்கை எழில் கொஞ்சம் காட்சி மற்றும் பசுமையான போர்வை போர்த்தியது போன்ற அமைப்பால் நன்கு அறியப்பட்டதாகும். கோடைகாலத்தில் செல்வதற்கு ஏற்ற இடம் கூர்க். உண்மையில், கோடைக் காலத்தில், மக்கள் இங்கு அதிக அளவில் சென்று வருவது வழக்கம். ஏனென்றால் அது மிகவும் பிரபலமான மலைபிரதேசமாகும். அதுதவிர, கூர்க் நகரமானது அழகிய நீர்வீழ்ச்சிகள், பசுமையான தேயிலை தோட்டங்களுக்கும் பிரபலமானது. இங்கு சென்று வருவதற்கு அதிக பணம் செலவாகாது.

டார்ஜிலிங் (Darjeeling)
கோடை விடுமுறையை கழிக்க டார்ஜிலிங்கின் இதமான சூழல் அருமையானதாக இருக்கும். வாட்டி வதைக்கும் கோடை காலத்தில் நீங்கள் இங்கு மலைகள், பள்ளத்தாக்குகள், பசுமை மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு சென்று அனுபவிக்க முடியும். உண்மையில், பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விலகி, நீங்கள் மன அழுத்தமில்லாத நேரத்தை செலவிட டார்ஜிலிங் அருமையான இடம் என்றே சொல்லலாம். அதுதவிர, பாரம்பரிய உள்ளூர் உணவுகள் மற்றும் பொம்மை ரயில் சவாரிகளும் இங்கு உள்ளன. உங்கள் பட்ஜெட் குறைவானது என்றால் இந்த இடம் ஏற்றதாக இருக்கும்.

மணாலி (Manali)
வசீகரிக்கும் இயற்கை அழகை தவிர, மணாலி அதன் வரம்பற்ற சாகச பயணங்களுக்கும் பேர் பெற்றது. புகழ்பெற்ற ஹடிம்பா கோயில், இயற்கை எழில் சூழ்ந்த ரோஹ்தாங் கணவாய், பனி நிறைந்த சோலாங் பள்ளத்தாக்கு மற்றும் அதன் மகிழ்ச்சிகரமான இயற்கை காட்சிகள் நிறைந்தது தான் மணாலி. கோடையில் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல மணாலி சிறந்த இடம். மலைகளின் கண்கவர் காட்சிகளை நீங்கள் இங்கு அனுபவிக்க முடியும். இதனுடன், பசுமையான புல்வெளிகள் மற்றும் பல சாகசச் செயல்களை நீங்கள் அனுபவிக்க முடியும்.

கன்னியாகுமரி (Kanniyakumari)
இந்த இடம் மத மற்றும் வரலாற்று வாசஸ்தலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாக, இது இந்தியாவில் அதிகம் சுற்றுலா பயணிகளால் பார்வையிடப்பட்ட இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. உண்மையில், இயற்கை அழகை பெருமைப்படுத்தும் இந்த இடம், பல அற்புதமான காட்சிகளை வழங்குகிறது. இந்திய வரலாற்றை அறிய வேண்டுமானால், கன்னியாகுமரி ஒரு சிறந்த இடம். இந்த கோடை விடுமுறையை குடும்பத்துடன் கன்னியாகுமரியில் செலவிடுவது சிறந்த திட்டமாக இருக்கும்.

வர்கலா (Varkala)
வர்கலா என்பது கேரளாவின் தென் பகுதியில் உள்ள ஒரு கடற்கரை நகரமாகும். இது கடற்கரைகள், கோட்டைகள், பசுமையான மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு பிரபலமானது. அதே நேரத்தில், இந்த இடம் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்றது. அதுமட்டுமின்றி, குறைந்த பட்ஜெட்டில் நீங்கள் இங்கே மன அமைதியுடன் விடுமுறையை அனுபவிக்க முடியும்.