Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
பயணம்

சூரிய உதயத்தை கண்டு ரசிக்க விரும்பினால் இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க...

A
Admin User
Journalist
May 09, 2022 1 min read 43 views
சூரிய உதயத்தை கண்டு ரசிக்க விரும்பினால் இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க...

சூரிய உதயம் மற்றும் மறைவு இரண்டுமே இயற்கையின் பேரழகான காட்சிகளில் இன்றியமையாதது. பலருக்கு சூரிய உதயத்தை கண்டு ரசிக்க மிகவும் பிடிக்கும். சூரிய உதயத்தை காண்பது நம்முள் ஏதோ ஒருவித நேர்மறை உணர்வை தூண்டும் விதமாக அமையும். ஒருவேளை, உங்களுக்கும் சூரிய உதயத்தைப் பார்க்க பிடிக்கும் என்றால், அதற்கென சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு சென்று பார்க்க தவறாதீர்கள். ஏனெனில் அழகிய இயற்கைக்காட்சிகளுக்கு மத்தியில் உதிக்கும் சூரியனின் காட்சியை காண்படு மனதிற்கு ஒரு வித்தியாசமான ஆறுதலைத் தருவதுடன், மிகவும் இனிமையானதாகவும் மாற்றும். இந்த கட்டுரையில், சூரிய உதயத்தை கண்டு ரசிக்க ஏற்ற இடங்களைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்…

 

 

சிலிகா ஏரி (Chilika Lake)

 

பூரி இந்தியாவில் சூரிய உதயத்தைக் காண ஒரு சிறப்பு இடமாகும். உண்மையில், இங்குள்ள கடல்களும் சூரிய உதயத்தை காண ஏற்ற இடமாகும். மேலும், இங்குள்ள சில்கா ஏரிக்கு இடையில் சூரிய உதயத்தின் அற்புதமான காட்சியை காண்பது சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு சென்றால் உலகையே மறந்து விடலாம். வாய்ப்பு கிடைத்தால் இங்கு சென்று சூரிய உதயத்தின் அழகை ரசித்து விட்டு வாருங்கள்.

 

 

 

வாரணாசி (Varanasi)

 

வாரணாசி அழகிய காட்சிகளின் கண்காட்சி என்றே கூறலாம். உண்மையில், இங்குள்ள கங்கை நதி கரையில் உதிக்கும் சூரியனைப் பார்ப்பது ஒரு இனிமையான உணர்வைத் தருகிறது. இந்த காட்சியைக் காண தொலைதூரங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். நீங்களும் இந்தக் காட்சியைப் பார்க்க விரும்பினால், வாரணாசிக்கு கட்டாயம் செல்லுங்கள். அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய அழகி இடம்.

 

 

மவுண்ட் அபு (Mount Abu)

 

மவுண்ட் அபு என்பது ராஜஸ்தானில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம். தேனிலவிற்கு பெயர் பெற்ற நகரமாகும். இந்த இடத்தை பார்த்தால், எதற்கான இந்த இடத்திற்கு மக்கள் அதிகம் அளவில் வருகை தருகிறார்கள் என்ற ஆச்சரியம் ஏற்படாது. இங்குள்ள புகழ்பெற்ற நக்கி ஏரியில் இருந்து சூரியன் உதயமாவதைக் காண்பது ஒரு வித்தியாசமான இன்பம்.

 

 

 

கோவளம் (Kovalam)

 

கடவுளின் தேசமான கேரளா இயற்கை அழகிற்கு பெயர் பெற்ற மாநிலம். அதிலும், கேரளாவின் கடற்கரை நகரமான கோவளம், அதன் அழகிய கடற்கரைகளுக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. இங்கு ஒருமுறை சென்று சூரிய உதயத்தை பார்த்தால் அந்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.

 

 

டைகர் ஹில்ஸ் (Tiger Hills)

 

டைகர் ஹில்ஸ் டார்ஜிலிங்கில் அமைந்துள்ளது. எவரெஸ்ட்டுக்குப் பிறகு இமயமலையின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான காஞ்சன்ஜங்கா மலைகளுக்குப் பின்னால் இருந்து சூரியன் உதயமாவதை அனைவருமே பார்க்க விரும்புவார்கள். இந்த காட்சியை வாழ்நாளில் ஒருமுறையேனும் பார்த்த ரசிக்க வேண்டும். அப்படிப்பட்ட அழகான இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கு நடுவே உதயமாகும் சூரியனை காண கண் கோடி இருந்தாலும் போதுமானதாக இருக்காது.

 

Boat 2025 Launch Rockerz Trinity Grande, 150H Battery, Hi Res Audio by LDAC, Dual Pair, ENx Tech, Stream Ad Free Music via App Support, Bluetooth Neckband, Wireless with Mic Earphones
Recommended for You
Boat 2025 Launch Rockerz Trinity Grande, 150H Battery, Hi Res Audio by LDAC, Dual Pair, ENx Tech, Stream Ad Free Music via App Support, Bluetooth Neckband, Wireless with Mic Earphones

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்கள்: குறைந்த செலவில் ஒரு சொர்க்கப் பயணம்!
வாசிக்க