Sunday, May 10, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

வறண்ட பாதத்தை மிருதுவா அழகா மாத்தனுமா? அப்ப இத செய்யுங்க போதும்…

A
Admin User
Journalist
January 03, 2022 4 min read 80 views
வறண்ட பாதத்தை மிருதுவா அழகா மாத்தனுமா? அப்ப இத செய்யுங்க போதும்…

முக அழகு, கூந்தல் அழகு, உடை அழகு போன்றவை அனைத்துமே ஒட்டுமொத்த அழகாக கருதப்படுகிறது. அதேபோல தான், பாதத்தின் அழகும் மிகவும் முக்கியமானது. ஆனால், பெரும்பாலானர்கள் பாதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. அதனாலேயே, அழுக்குகள் சேர்த்து பாதங்கள் வறண்டு பார்க்கவே அசிங்கமாக வெடிப்பு ஏற்பட்டு இருக்கும். அதனால் தான் உங்களது பாதத்தை மென்மையானதாக, அழகானதாக மாற்றிட உதவும் சில குறிப்புகளை தற்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன்.

பாதத்தின் அழகிற்கு முதன்மையானது சுத்தமாக வைத்துக் கொள்வது தான். அதற்காக, உங்கள் கால்களின் நகங்களில் க்யூடிக்கல் எண்ணெயை தேய்க்கவும். எண்ணெய் தடவிய பின், உங்கள் கால்களை வெதுவெதுப்பான தண்ணீரில் சுமார் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்னர் பாதங்களை பெடிக்யூர் கிட் கொண்டு சுத்தம் செய்யுங்கள். பல பெண்கள் பார்லருக்குச் சென்று தங்களது கால்களை சுத்தம் செய்து கொள்கின்றனர். பார்லருக்கு செல்லாமலேயே, கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி செய்தால் போதும், வறட்சி, வெடிப்பு நீங்கி பாதங்கள் அழகாக மாறிவிடும்…

*பாதங்களை மிருதுவான மாற்றவேண்டுமானால், பாதத்தில் உள்ள இறந்த செல்களை தினந்தோறும் நீக்கிட வேண்டும். அதற்காக, தினமும் குளிக்கும் போது பாதங்களை தேய்த்து நன்கு சுத்தம் செய்திட வேண்டும். பாதத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வெதுவெதுப்பான நீரை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

*அழகான பாதத்தை பெற வேண்டுமென்றால், ஈரப்பதத்தை தக்க வைக்க வேண்டியது அவசியம். எனவே, தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு, கால்களை சுத்தம் செய்துவிட்டு, ஃபுட் க்ரீம் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பாதங்கள் மென்மையானதாக, அழகானதாக மாறிவிடும்.

*பாதங்களை சுத்தம் செய்ய மிகவும் சூடான நீரை பயன்படுத்தவே கூடாது. அப்படி செய்தால் வறட்சி ஏற்படும். எனவே, எப்போதுமே பாதங்களை சுத்தம் செய்யும் போது வெதுவெதுப்பான நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

*மிருதுவான மற்றும் சுத்தமான பாதங்களை பெற வேண்டுமென்றால், தினமும் எண்ணெய் தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்பு இப்படி செய்து விட்டு தூங்கினால், வெடிப்பு ஏற்படாது, பாதங்களும் அழகாக மாறிவிடும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,150
தங்கம் (24k)
1 கிராம்
₹14,858
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க