ஒருவர் எவ்வளவு ஆரோக்கியத்துடன் இருந்தாலும், முதுமையின் தாக்கம் முகத்திலும் தெளிவாகத் தெரியும். வயதாவதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பு. ஆனால், பெண்களுக்கு சருமத்தில் ஏற்படும் சுருக்கம் ஒருவகையான சங்கடத்தை ஏற்படுத்தும். சுருக்கங்கள் முகத்தின் பொலிவை நீக்கும். 30 வயதில் 50 வயதான தோற்றத்தைத் தரக்கூடும். இதுபோன்ற நேரங்களில் உங்கள் சருமத்தை நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதற்காக சரும சுருக்கத்தைப் போக்க மேக்கப், அழகு பராமரிப்பு நிலையத்தில் சென்று நிறைய செலவு செய்து பல பேர் சருமத்தை பராமரிப்பார்கள். ஆனால், இனிமேல் செலவு செய்து சருமத்தை பராமரிக்க வேண்டுமென்ற அவசியம் இருக்காது. எல்லார் வீட்டிலும் இருக்கக்கூடிய ஒரு பழத்தை வைத்து முகத்தில் இருக்கும் சுருக்கத்தைப் போக்கிடலாம். அதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…
வாழைப்பழம்
வயதாவதால் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்க வாழைப்பழத்தைப் பயன்படுத்துவது சிறந்த பலனளிக்கும். உண்மையில், வாழைப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் முகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கிட உதவும். இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது. இதனால் சருமம் சுருக்கமின்றி பொலிவு பெற்று இளமையாக எப்போதும் இருக்கலாம்.
பயன்படுத்தும் முறை
முதலில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் நன்றாக மசித்து கொள்ளவும். இப்போது மசித்த வாழைப்பழ பேஸ்டை முகத்தில் தடவவும். சுமார் 15-20 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிடவும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதனை செய்து வர சிறப்பான பலனைப் பெறலாம்.
ஆலிவ் ஆயில்
முகச் சுருக்கங்களை நீக்க ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது சிறந்த வழியாகும். இதில் காணப்படும் வைட்டமின்-ஈ உங்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி சுருக்கங்களை குறைக்கும். தினமும் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது உங்கள் எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும்.
பயன்படுத்தும் முறை
உங்கள் கையில் சில துளிகள் ஆலிவ் ஆயிலை எடுத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்குவதற்கு முன்பு, ஆலிவ் ஆயிலை கைகளால் முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிடவும். தினந்தோறும் இதனைச் செய்து வருவதன் மூலம் முகத்தில் சுருக்கமே ஏற்படாது.