Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
பயணம்

உலகின் முதல் சைவ நகரம் எங்கு இருக்கிறது தெரியுமா?

A
Admin User
Journalist
March 07, 2022 1 min read 41 views
உலகின் முதல் சைவ நகரம் எங்கு இருக்கிறது தெரியுமா?

விடுமுறைக்கு இந்த முறை எங்கு செல்வதென்று தேடி கொண்டிருக்கிறீர்களா? ஒருவேளை உங்களுக்கு உலக புகழ் பெற்ற இடத்திற்கு சென்று அதனை கண்டு ரசிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால் குஜராத்தில் இருக்கக்கூடிய பாலிதானா எனும் நகருக்கு சென்று வாருங்கள். இதை உலகின் முதல் சைவ நகரமாக திகழ்கிறது. இங்கே, உணவு நோக்கங்களுக்காக விலங்குகளை கொல்வது முற்றிலும் சட்டவிரோதமானது. மேலும் முட்டை அல்லது இறைச்சியை விற்பனை செய்வது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. நீங்கள் அசைவத்தை விரும்பினால், இந்த இடம் உங்களுக்கானது அல்ல. ஆனால் உங்கள் வாழ்க்கையை ஒரு முழுமையான சைவ உணவு உண்பவராக நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் இந்த இடத்திற்குச் சென்று சில நாட்களுக்கு தங்க வேண்டும்.

முட்டை, இறைச்சி விற்க தடை

2014 ஆம் ஆண்டில், விலங்குகளை கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200 ஜெயின் துறவிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 250 இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே இந்த இடத்தில் இதுபோன்ற விதிமுறைகளை விதிக்க மாநில அரசு நிர்பந்திக்கப்பட்டது. எனவே, இந்த நகரம் நாட்டில் மட்டுமல்ல உலகிலேயே இறைச்சி இல்லாத மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பால், நெய், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை அந்த பகுதி மக்கள் உட்கொள்கின்றனர்.

சமணர்களின் புனித தலம்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பவநபர் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பாலிதானா எனும் தான் உலகின் முதல் சைவ நகரமாக விளங்குகிறது. பாலிதானா நகரம் சமணர்களின் புனித தலமாக விளங்குகிறது. இந்த ஊரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலையில் இருக்கக்கூடிய சத்ருஞ்ஜெய மலை சமணர்களின் முக்கிய புனித தலமாகும். அதுமட்டுமின்றி, இதை சுற்றிலும் நூற்றுக்கணக்கான சமணக் கோயில்கள் அமைந்துள்ளது இதன் மற்றொரு சிறப்பு. இதற்கு காரணம், சமணர்களின் முதல் தீர்த்தங்கரர் ஆன ஆதிநாதர் எனும் ரிசபதேவர் பாலிதானா நகரத்தின் சத்ருஞ்ஜெய மலையில் அமர்ந்து தியானம் செய்தார் என்பது சமணர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன் காரணமாக தான் சத்ருஞ்ஜெய மலையில் சமணர் கோயில்கள் எழுப்பப்பட்தாகவும் புராண கதைகள் தெரிவிக்கின்றன.

900 கோயில்கள்
பாலிதானா நகரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், உலகத்தில் அதிக கோயில்களை கொண்ட மலை தான் இந்த சத்ருஞ்ஜெய மலை. இந்த மலையானது பளிங்கு கற்களால் ஆன சுமார் 900 சமணர் கோயில்கள் ஒருங்கிணைந்த தலமாக அமைந்துள்ளது. மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்ல 3,800 படிகளை ஏறி செல்ல வேண்டும்.

இவற்றை தவிர, பாலிதானா நகரில் சத்ருஞ்சயா மலை, ஸ்ரீ விஷால் ஜெயின் அருங்காட்சியகம், ஹஸ்தகிரி ஜெயின் தீர்த்தம், கோப்நாத் பீச், தலாஜா போன்ற பல இடங்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம். இங்கு செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சென்று வாருங்கள். நல்ல அனுபம் கிடைக்கும்.

MI Xiaomi 22.5W Fast Charger with USB-C Cable, Quick Charge 3.0 Power Adapter Compatible with Redmi Note Series, Poco, Mi, Any Type C Devices
Recommended for You
MI Xiaomi 22.5W Fast Charger with USB-C Cable, Quick Charge 3.0 Power Adapter Compatible with Redmi Note Series, Poco, Mi, Any Type C Devices

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்கள்: குறைந்த செலவில் ஒரு சொர்க்கப் பயணம்!
வாசிக்க