மழை பெய்யும் மாலை வேளையில் சூடாக, காபி, டீயுடன் எண்ணெயில் பொரித்தெடுத்த போண்டா சாப்பிட அனைவருக்குமே பிடிக்கும். அதற்காக நிறைய வேலை செய்ய வேண்டுமென்று இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் சுவையான போண்டா செய்திடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதை விரும்பி சாப்பிடுவர். சரி வாருங்கள், இந்த கட்டுரையில் கோதுமை போண்டா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு - 1 கப்
  • அரிசி மாவு - 1/4 கப்
  • வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
  • கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
  • புதினா - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • உப்பு - சுவைக்கேற்ப
  • பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, புதினா, பேக்கிங் சோடா, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர், அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, போண்டா பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • அடுத்ததாக, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
  • எண்ணெய் நன்கு சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள மாவை போண்டா மாதிரி உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • இந்த சுவைாயன கோதுமை போண்டாவை தேங்காய் சட்னி உடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.

Image Courtesy: yummytummyaarthi