Monday, August 24, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

டேஸ்டி வெஜிடபிள் கபாப்…

A
Admin User
Journalist
December 13, 2021 4 min read 173 views
டேஸ்டி வெஜிடபிள் கபாப்…

ஈவ்னிங் நேரத்தில் ஏதாவது நொறுக்கு தீனி சாப்பிட வேண்டுமென்று குழந்தைகள் முதல் அனைவருக்குமே தோன்றும் தான். ஆரோக்கியமற்ற சுவையான நொறுக்கு தீனியை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். அதுவே, குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு உணவை சாப்பிட கொடுத்தால் விரும்பியும் சாப்பிடுவார்கள், உடலில் சத்துக்களும் சேரும். குழந்தைகள் வேண்டாம் என்று கூறும் காய்கறிகளை அவர்களுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்தால் வேண்டாம் என்று கூறாமல் சாப்பிடுவார்கள். வாருங்கள்இ சுவையான மற்றும் எளிமையான வெஜிடபிள் கபாப் எப்படி செய்வதென்று பார்ப்போம்…

தேவையான பொருட்கள்

சுரைக்காய் – 2 கப் (துருவியது)

வெங்காயம் – ¼ கப் (துருவியது)

உருளைக்கிழங்கு – 1 கப் (வேக வைத்து மசித்தது)

கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

சீரகம் – 1 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

எண்ணெய் – பொரிப்பதற்கேற்ப

வெங்காயம் – ½ கப் (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

*முதலில் துருவிய சுரைக்காயை அழுத்தி அதிலுள்ள நீர் அனைத்தையும் பிளிந்து விட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

*அதன் பின்னர், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் அத்துடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

*இப்போது அதனை சிறு சிறு சரிசம உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

*உருட்டிய உருண்டைகளை கபாப் வடிவில் தட்டி வைத்துக் கொள்ளவும்.

*இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

*எண்ணெய் நன்கு சூடேறியதும், அதில் தட்டி வைத்த கபாப் உருண்டைகளை போட்டு 2 புறமும் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.

*பேப்பர் நாப்கினில் பொரித்தெடுத்த கபாப்களை போடவும். இதனால் அதிலிருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கிவிடும்.

*இப்போது கபாப்-க்கு ஏற்ற சுவையான வெங்காய மசாலா செய்யலாம்.

*பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மாங்காய் மற்றும் உப்பு சேர்த்து கலந்தால் வெங்காய மசாலா தயார்.

*தயார் செய்த வெஜிடபிள் கபாப் உடன் வெங்காய மசாலாவை பரிமாறினால் நொடியில் தீர்ந்துவிடும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,950
தங்கம் (24k)
1 கிராம்
₹15,698
வெள்ளி
1 கிராம்
₹270
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க