Friday, May 15, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

பெங்காலி ஸ்டைல் மீன் குழம்பு!!!

A
Admin User
Journalist
June 22, 2022 4 min read 211 views
பெங்காலி ஸ்டைல் மீன் குழம்பு!!!

மீன் குழம்பு ஒவ்வொரு ஊர்களில் ஒவ்வொரு விதமாக செய்வார்கள். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களுக்கென தனி சமையல் பாணி உள்ளது. அதன் சுவையும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஆனால், இன்று நாம் வங்கதேச உணவு முறைப்படி, மீன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள போகிறோம். பெங்காலி ஸ்டைல் மீன் குழம்பு மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்று. மீனில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கி, இரத்த சோகையைப் போக்க உதவும். சரி இப்போது பெங்காலி ஸ்டைல் மீன் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

  • ரோகு மீன் - 500 கிராம்
  • இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • எண்ணெய் - தேவையான அளவு
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • பிரியாணி இலை - 2
  • வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி - 2
  • நறுக்கிய பச்சை மிளகாய் - 2
  • மல்லி தூள் - 1 டீஸ்பூன்
  • சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள் - 1/2 கப்
  • உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை

  • முதலில் மீனை வட்ட வட்டமாக நறுக்கி கல் உப்பு சேர்த்து நன்கு கழுவி தனியே எடுத்து வைக்கவும்.
  • அதனுடன் பாதி இஞ்சி பூண்டு விழுது, சிவப்பு மிளகாய், மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  • பின்னர், ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், ஊற வைத்த அனைத்து மீன் துண்டுகளையும் மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, மீதமுள்ள இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  • அதனுடன் மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  • இப்போது நறுக்கிய தக்காளியைச் சேர்த்து 4-5 நிமிடங்கள் வதக்கவும்.
  • மசாலா எண்ணெய் விட ஆரம்பித்ததும், தேவையான அளவு தண்ணீரை ஊற்றவும்.
  • இப்போது பொடியாக நறுக்கிய மிளகாய் சேர்த்து குழம்பை நன்கு கொதிக்க விடவும்.
  • குழம்பு நன்கு கொதித்ததும் பொரித்த மீனை சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
  • மீன் வெந்த பிறகு, அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கினால் அருமையான பெங்காலி ஸ்டைல் மீன் குழம்பு பரிமாற தயார்.
Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,950
தங்கம் (24k)
1 கிராம்
₹15,698
வெள்ளி
1 கிராம்
₹305
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க