நாட்டுக்கோழி குழம்பு உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அதுலயும் எப்பயும் ஒரே மாதிரி சமைக்காமல் சற்று வித்தியாசமான முறையில் நாட்டுக்கோழி குழம்பு வைத்து சாப்பிட்டா எப்படி இருக்கும்? அதனால இப்ப வறுத்து அரைச்ச நாட்டுக்கோழி குழம்பு எப்படி செய்வதென்று பார்க்க போகிறோம். உங்க வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த ஸ்டைலில் நாட்டுக்கோழி குழம்பு வைத்து கொடுங்கள், மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாருங்கள், இப்போது வறுத்தரைச்ச நாட்டுக்கோழி குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்…

தேவையான பொருட்கள்:

  • நாட்டுக்கோழி - 1 கிலோ
  • வெங்காயம் - 3 (நறுக்கியது)
  • தேங்காய் எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • சோம்பு - 2 டீஸ்பூன்
  • பிரியாணி இலை - 1
  • ஏலக்காய் - 4
  • கிராம்பு - 4
  • பட்டை - 1 துண்டு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
  • தக்காளி - 4 (நறுக்கியது)
  • மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப

வறுத்து அரைப்பதற்கு…

  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • வரமிளகாய் - 6
  • மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் - 1 கப்

செய்முறை:

  • முதலில் நாட்டுக்கோழியை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்னர், கழுவிய நாட்டுக்கோழியை குக்கரில் போட்டு, அத்துடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து, 5-6 விசில் விட்டு இறக்கவும்.
  • அடுத்ததாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, வரமிளகாய், மல்லி சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தேங்காயையும் அதனுடன் சேர்த்து வறுத்து இறக்கவும். அது நன்கு ஆறிய பிறகு, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மசாலா பொருட்களை சேர்த்து தாளித்து, பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • அத்துடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
  • அடுத்ததாக அதில் மசாலா பொடிகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.
  • பின்பு வேக வைத்த சிக்கனை சேர்த்து கிளறி, அரைத்த மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான வறுத்தரைச்ச நாட்டுக்கோழி குழம்பு தயார்.
  • ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள், பின்னர் அடிக்கடி இதனை செய்து சாப்பிட தோன்றும்.

Image Courtesy: yummytummyaarthi