இன்றைய காலக்கட்டத்தில், ஒவ்வொருக்கும் ஏதோ ஒரு வலி நிச்சயம் பாடாய் படுத்திக் கொண்டு தான் இருக்கும். பல் வலி, கால் வலி, உட்பட பல்வேறு வலிகள் உள்ளன. அப்படிப்பட்ட வலிகளுக்கு முதலில் அனைவரும் முயற்சி செய்து பார்ப்பது வீட்டு வைத்தியங்களை தான். அந்த வகையில், இப்போது நாம் பல் வலிக்கான வீட்டு வைத்தியத்தை பற்றி பார்ப்போம்…
பீட்சா, பர்கர் போன்ற உணவுப்பழக்கங்களால் கூட பல் வலி அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், இவை அனைத்தும் மிகவும் மென்மையான மாவுகளால் செய்யப்படக்கூடியவை. அவற்றை சாப்பிடும் போது, அவை நம் பற்களில் ஒட்டிக் கொண்டு ஈறுகளை சேதப்படுத்தக்கூடும். இது போன்ற உணவுகளை சாப்பிடும் 60% பேருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அவர்கள் அனைவரும் பல்வலியால் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவை பற்களில் புழுக்களை உண்டாக்கி, ஒட்டுமொத்த உடலுக்குமே தீங்கு விளைவிக்கக்கூடும்.
வலி உடனே குறையும்
வலிகளிலேயே மிகவும் கொடுமையானது என்றால் அது பல் வலி தான். பல் வலி வந்தால், சாப்பிட முடியாது, தூங்க முடியாது, தண்ணீர் குடிக்க முடியாது, எந்தவொரு விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாது. இது போன்ற ஊரடங்கு காலத்தில் பல்வலி ஏற்பட்டால் மருத்துவமனைக்கும் சுலபமாக சென்றிடவும் முடியாது. அதனால், இப்போது பல் வலிக்கான வீட்டு வைத்தியத்தை தங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு செய்து வந்தாலே, பற்களில் இருக்கும் புழுக்கள் மடிந்துவிடும். அதுமட்டுமின்றி, இதனை பற்களில் தடவிய உடனேயே வலி குறைந்துவிடும். வாருங்கள் இப்போது அதனை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வோம்…
கடுகு எண்ணெய் மற்றும் உப்பு
கடுகு எண்ணெய் மற்றும் உப்பு இரண்டையும் பற்களில் தேய்ப்பதால் பற்களின் ஆரோக்கியம் மேம்படும். இது பல்வேறு வகைகளில் பற்களுக்கு நன்மைகளை செய்திடக்கூடும். ஒரு சிட்டிகை உப்பை, சிறிது கடுகு எண்ணெயுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது அதனை, வலி இருக்கும் பற்களில் தேய்க்கவும். தேய்த்த சிறிது நேரத்திலேயே வலி குறைவதை உணரலாம். ஒரு நாளைக்கு தொடர்ந்து 4 முறை என்று, 2 நாட்களுக்கு செய்து வந்தால் பற்களில் இருக்கும் புழுக்கள் அனைத்தும் மடிவதோடு, பற்களும் மஞ்சள் கறைகள் நீங்கி பளிச்சென்று ஜொலிக்கும்.