Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

உங்களுக்கு முடிக்கு எண்ணெய் தேய்க்க பிடிக்காதா? அப்ப இத யூஸ் பண்ணி பாருங்க...

A
Admin User
Journalist
December 07, 2021 6 min read 65 views
உங்களுக்கு முடிக்கு எண்ணெய் தேய்க்க பிடிக்காதா? அப்ப இத யூஸ் பண்ணி பாருங்க...

சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருப்பதற்கு எப்படி போதுமான ஈரப்பதம் தேவையோ அதேப் போல் தான் தலைமுடிக்கும் ஈரப்பதம் அவசியமான ஒன்று. ஒருவரது தலைமுடியில் போதுமான ஈரப்பதம் இல்லாவிட்டால், முடி வறண்டு உடைய ஆரம்பித்துவிடும். தலைமுடிக்கு தேவையான ஈரப்பதமானது எண்ணெய் பூசுவதன் மூலம் பெறப்படுகிறது. ஆனால் நிறைய பேருக்கு தலைக்கு எண்ணெய் தேய்க்க பிடிக்காது. ஆனால், முடி மட்டும் வறண்டு போகாம ஈரப்பதத்தோட, ஹெல்த்தியா இருக்கனும்னு ஆசை படுவாங்க. அப்படிப்பட்டவங்களுக்காக தான் இந்த கட்டுரை…

தலைமுடியின் வறட்சியைத் தடுக்க எண்ணெய்க்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள்

தயிர்

கால்சியம் மற்றும் புரோட்டீன் மட்டுமில்லை தயிரில் வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் கூட அதிகம் உள்ளன. இது அனைத்துமே முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கக்கூடியவை. மேலும் தயிர் மற்றும் யோகர்ட் ஆகிய இரண்டும் முடி சொரசொரப்பைக் குறைப்பதோடு, தலைமுடியை ஈரப்பதத்துடனும், மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவும். குறிப்பாக தயிரில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், தலையில் உள்ள பொடுகை தொல்லைய போக்கவும் உதவும்…

அவகேடோ

அவகேடோவில் பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, தலைமுடியின் வறட்சியைப் போக்குவதிலும் சிறந்தது. இந்த அவகேடா எல்லா விதமான தலைமுடியினருக்கும் நன்மையை வழங்கும். அதற்கு அவகேடோ பழத்தின் சதைப் பகுதியை அரைத்து, அதை ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலசி வந்தால், முடி ஆரோக்கியமாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இயற்கையாவே எண்ணெய் சத்துடன், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளன. இந்த சத்துக்கள் முடியின் வேர்கால்களை மென்மையாக்குவதோடு, முடியின் நெகிழ்வுத்தன்மையைப் பாதுகாக்கிறது. முடி வெடிப்பு மற்றும் முடி உடைவதைத் தடுப்பது மட்டுமின்றி பொடுகுத் தொல்லையையும் கட்டுப்படுத்தும். இதனால் முடி ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், அடர்த்தியாகவும் மாறும். அதனால் இனிமேல் அடிக்கடி வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்கள். அதுவும் நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, ஈரமான தலைமுடியில் தடவி, ஷவர் கேப் அணிந்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிர்ந்த நீரில் அலசிடவும்.

தேன்

பொதுவாகவே தேன் ஒரு மென்மையாக்கும் பொருளாக பயன்படுத்தபடுகிறது. இது முடியின் வேர்கால்களை மென்மையாக்க உதவுவதோடு, பொலிவிழந்த முடிக்கு பிரகாசத்தையும் வழங்கும். இதனால் தேனை முடிக்கு பயன்படுத்திட்டு வந்தா, முடி வறட்சி நீங்கி, அதில் உள்ள ஊட்டச்சத்துக்களால் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக தேனில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளதால், இது பொடுகுத் தொல்லை மற்றும் அழற்சி போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும். சிலர் தேனை தலைமுடிக்கு யூஸ் பண்ணா முடி வெள்ளை ஆகிடும்னு சொல்லுவாங்க. ஆனால், அது உண்மையில்ல. அதனால் நீங்கள் தேனை தலைக்கு தாராளமா பயன்படுத்தலாம்.

முட்டை

முட்டை தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்குவது மட்டுமில்லாமல், சேதமடைந்த முடியை சரிசெய்யவும், ஸ்கால்ப்பை வறட்சியடையாமல் தடுக்கவும் உதவும். மேலும், முட்டையில் புரோட்டீன் மற்றும் பயோடின் அதிகம் உள்ளதால், இது ஸ்கால்ப் மற்றும் தலைமுடிக்கு போதுமான ஊட்டமளித்து, முடியின் வளர்ச்சியையும், வலிமையையும் அதிகரித்து, முடியை அழகாக வைத்திருக்க உதவுகிறது. ஆகவே, உங்கள் முடி அதிகம் வறண்டு காணப்பட்டால், முட்டையை உடைத்து நல்லெண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலையில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்த, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க