Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

சாப்பிட்டதும் டூத்பிக்கால பல் குத்தும் பழக்கம் இருக்கா? அப்ப உடனே நிறுத்திடுங்க...

A
Admin User
Journalist
January 04, 2022 1 min read 22 views
சாப்பிட்டதும் டூத்பிக்கால பல் குத்தும் பழக்கம் இருக்கா? அப்ப உடனே நிறுத்திடுங்க...

சாப்பிட்ட பிறகு டூத்பிக் பயன்படுத்த விரும்புபவர்கள் பலர் இருக்கின்றனர். அத்தகையவர்கள் டூத்பிக் அல்லது கூர்மையான பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்யும் பழக்கம் கொண்டவர்கள். ஆனால் இந்த பழக்கம் இருந்தால், அது உங்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கும். டூத்பிக் கொண்டு பற்களை தோண்டினால் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளில் ஒன்றல்ல, பல பிரச்சனைகள் ஏற்படும் என்கின்றனர் வல்லுநர்கள். அதைப் பற்றி தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். உங்களுக்கு பல் குடையும் பழக்கம் இருந்தால் இதை முழுவதுமாக படித்து பார்த்து, அந்த பழக்கத்தை இன்றோடு விட்டுவிடுங்கள்.

பற்களுக்கு இடையில் இடைவெளி அதிகரிக்கலாம்
பல் குத்தும் குச்சியால் பற்களை அடிக்கடி குத்தி சுத்தம் செய்வது உங்கள் பற்களுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்திவிடும். இது மோசமான தோற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உணவு சிக்கியிருக்கும் போது பற்களில் கேவிட்டி பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.

பற்களை பலவீனமாக்கும்
சிலர் டூத்பிக் மற்றும் ஊசி போன்றவற்றால் பற்களை சுத்தம் செய்யும் போது அதனை மெல்ல அசைபோடுவார்கள் . இது பற்களின் எனாமலை சேதப்படுத்தி பற்களை வலுவிழக்கச் செய்யலாம்.

பற்களின் வேர்கள் சேதமடையலாம்
அடிக்கடி அல்லது எப்போதும் டூத்பிக்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு பற்களின் வேர்கள் விரைவில் வலுவிழக்கலாம். உண்மையில், டூத்பிக் பயன்படுத்தும் போது அது உடைந்து, அதன் சிறு துண்டு பற்களில் சிக்கி, திசுக்களுக்கு சேதம் விளைவிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

ஈறுகளில் இரத்தம் வரலாம்
டூத்பிக் அல்லது ஊசிகளைக் கொண்டு பற்களைத் தோண்டினால் ஈறுகளில் காயங்கள் ஏற்படும். அதே நேரத்தில், ஈறுகளில் இரத்த கசிவும் ஏற்படலாம்.

வேறு என்ன முறைகளைப் பின்பற்றலாம்?

  • டூத்பிக்கால் பற்களை சுத்தம் செய்யும் பழக்கத்தை விட்டுவிட முயற்சியுங்கள். ஆனால் உங்களால் கைவிட முடியவில்லை என்றால், வேம்பு குச்சியைப் பயன்படுத்தலாம்.
  • தினமும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதற்கு வெதுவெதுப்பான உப்புநீரைப் பயன்படுத்துவது நல்லது.
  • சாப்பிட்டவுடன் பல் துலக்குவதைக் கூட வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)
Recommended for You
Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க