Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

இந்த சரும பிரச்சனைகள் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்...உஷார்!!!

A
Admin User
Journalist
September 12, 2022 1 min read 46 views
இந்த சரும பிரச்சனைகள் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்...உஷார்!!!

ஒருவரது சருமத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அவற்றை உடனே கவனித்தாக வேண்டும். சிலருக்கு சாதாரண சரும பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால், ஒரு சிலருக்கு ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகள் சிறுநீரக பாதிப்பால் ஏற்படக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால், அது தான் உண்மை. சரும பிரச்சனைகளை பொறுத்தவரை, ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய முயற்சிக்க வேண்டியது அவசியம். ஒருவருக்கு சிறுநீரக பிரச்சனை இருந்தால், அவை சரும பிரச்சனைகள் மூலம் வெளிப்படுத்த நம் உடலானது முயற்சிக்கும். எனவே, அவற்றை உரிய நேரத்தில் கவனிக்க வேண்டும். இப்போது சிறுநீரக பிரச்சனைகளால் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்…

அரிப்பு

சரும அரிப்பு என்பது மிகவும் பொதுவான பிரச்சனை. ஆனால் அதன் தீவிர தன்மைக்கு வேறு பிரச்சனைகள் கூட காரணமாக இருக்கலாம். தாங்க முடியாத சரும அரிப்பு என்பது மேம்பட்ட சிறுநீரக நோயின் பொதுவான அறிகுறியாகும். சரும அரிப்பு என்பது எரிச்சலூட்டுவது முதல் வாழ்க்கையை சீர்குலைப்பது வரை எதை வேண்டுமானாலும் குறிக்கலாம். அடிக்கடி உங்கள் சருமத்தில் அரிப்பு ஏற்பட்டால் அதை உடனே கவனியுங்கள்.

தடிப்புகள்

சிறுநீரக நோய்களும் உடலில் தடிப்புகளை உருவாக்கக்கூடும். சிறுநீரகங்கள் உங்கள் உடலில் இருந்து கழிவுகளை சரியான அகற்ற முடியாத போது, உடலில் தடிப்பு, சொறி போன்றவற்றை உருவாகலாம். சிறுநீரக நோயின் இறுதி நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்படும் ஒரு வட்ட வடிவ தடிப்பு மற்றும் அதிகப்படியான அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். இந்த தடிப்புகள் சரியானதும், வேறு இடத்தில் புதிய தடிப்பு உருவாகலாம்.

ஒரே மாதத்தில் உடல் எடையைக் குறைக்க இந்த யோகாசனங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் போதும்…

வீக்கம்

பாதம், கால்கள், கைகள் மற்றும் சில சமயங்களில் முகத்தில் கூட வீக்கம் ஏற்பட்டால், அது உங்கள் உடல் நச்சுகளை வெளியேற்ற முடியாமல் இருப்பதால் ஏற்படக்கூடியது. இதுபோன்ற சமயங்களில் உப்பு உட்பட கூடுதல் திரவங்களை உடல் தக்கவைத்துக் கொள்ளும்போது அங்காங்கே வீக்கங்கள் ஏற்படும். கண் வீக்கமும் சிறுநீரக நோயின் மற்றொரு அறிகுறி தான். எனவே நீங்கள் இந்த பிரச்சனையை எதிர்கொண்டால் அதற்கு சிறுநீரக பிரச்சனை காரணமாக இருக்கலாம். உடனே, கவனியுங்கள்.

சரும நிற மாற்றம்

சிறுநீரக நோய் உங்கள் உடலில் நச்சுகள் சேருவதற்கு காரணமாகிறது. சிறுநீரகங்கள் உடலில் இரத்தத்தை சரியாக வடிகட்டாதபோது, ​​​​உங்கள் சருமத்தில் நிற மாற்றங்களை ஏற்படுத்தும். உங்கள் சருமம் சாம்பல் அல்லது மஞ்சள் நிறம், கரு வளையங்கள் அல்லது ஆரோக்கியமற்ற வெளிறிய தோல் ஆகியவற்றை நீங்கள் கவனிக்கலாம்.

என்ன செய்தாலும் உங்கள் தலைமுடியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறதா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

நகத்தின் நிறத்தில் மாற்றம்

சிறுநீரக நோய் உங்கள் கைவிரல் நகங்கள், கால் நகங்கள் அல்லது இரண்டின் தோற்றத்தையும் பாதிக்கலாம். மேம்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகங்களின் மேல் பகுதியில் வெள்ளை நிறம் மற்றும் கீழ் பகுதியில் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். வெளிர் நகங்கள் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நகங்கள் முழுவதும் வெள்ளை பட்டைகள் இருப்பது. இவையும் சிறுநீரக பிரச்சனைகளால் ஏற்படக்கூடியவை.

இரண்டே நாளில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறையனுமா? அப்ப இத செஞ்சு பாருங்க…

குழந்தைகளுக்கு பிடித்தமான பாசிபருப்பு கட்லெட்!!!

புதனின் வக்கிர பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் ஏற்படப்போகும் மாற்றங்கள்…

Memory Foam Car Seat Back Support, Orthopedic Lumbar Back Rest for Back Pain Relief, Back Support Pillow for Office ChairCarBack Support Pillow
Recommended for You
Memory Foam Car Seat Back Support, Orthopedic Lumbar Back Rest for Back Pain Relief, Back Support Pillow for Office ChairCarBack Support Pillow

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க