Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

இரவு நேரத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடவே கூடாதாம்... ஏன் தெரியுமா?

A
Admin User
Journalist
June 06, 2022 1 min read 24 views
இரவு நேரத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடவே கூடாதாம்... ஏன் தெரியுமா?

வெப்பமான கோடைகாலத்தில், உஷ்ணத்தைக் குறைக்க குளிர்ந்த உணவுகளை உட்கொள்வார்கள். பெரும்பாலும், குளிர்ச்சியான உணவுகள் உடலையும் மனதையும் அமைதியாக வைத்திருக்க உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவுகளில் வெள்ளரியையும் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. வெள்ளரிக்காய் நீர்க்காய் என்பதால் அது கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைப்பாட்டை ஈடு செய்திட உதவும். கோடை நாட்களில், வெள்ளரிக்காய் உடலை குளிர்விக்கும். அதற்குக் காரணம், அதில் தண்ணீர் நிறைந்துள்ளது. இதனுடன், உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உண்மையில், இதில் வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது தவிர, பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கோடையில் இதனை உட்கொள்வது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இருப்பினும், இதை இரவில் உட்கொள்ளக்கூடாது. ஏனெனில், இது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தூங்கமின்மை பிரச்சனை

நிபுணர்களின் கூற்றுப்படி, இரவில் வெள்ளரிக்காயை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது கடுமையான உணவுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஏனெனில், இது ஜீரணிக்க நீண்ட நேரம் எடுத்து கொள்ளும். இதனால் இரவில் ஆழ்ந்த தூக்கம் தூங்குவது மிகவும் கடினமான ஒன்றாகிவிடும். உண்ட உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்றால், இரவு நேரத்தில் தூங்குவது சிரமமாகி விடும். இதன் காரணமாக, இரவில் தூங்குவதற்கு முன்பு வெள்ளரிக்காய் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

வாயு மற்றும் அஜீரண பிரச்சனை

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமுள்ளது. இது மலச்சிக்கல் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகிறது. உண்மையில், வெள்ளரிகளில் கோக்ரெபிடின் என்ற தனிமம் உள்ளது. இதன் காரணமாக வெள்ளரிகள் கசப்பான சுவை கொண்டுள்ளது. இது வாயு மற்றும் அஜீரண பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, இரவு நேரத்தில் அதை சாப்பிடுவதைத் தவிர்த்திடவும்.

சைனஸ் பிரச்சனை

வெள்ளரிக்காய் மிகவும் குளிர்ச்சியான காய். சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இதை உட்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, இரவு நேரத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை நினைத்து கூட பார்க்க கூடாது.

கர்ப்பிணிப் பெண்கள்

கர்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் வெள்ளரிகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். உண்மையில், வெள்ளரிகளில் அதிக நீர் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். எனவே, இரவு நேரத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் அவர்கள் மிகவும் சங்கடமாக உணரலாம்.

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)
Recommended for You
Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க