சிக்கன் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் ஹோட்டலுக்கு சென்றால் வாங்கி விரும்பி சாப்பிடும் சிக்கன் ரெசிபிகள் ஏராளம் இருக்கும். அவற்றில் அனைவருக்கு பிடித்தமான ரெசிபிகளில் ஒன்று பெரி பெரி சிக்கன். அதை சுலபமாக வீட்டிலேயே செய்து அசத்தலாமே. வாருங்கள், அதற்கான செய்முயை இப்போது பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்
சிக்கன் – 500 கிராம்
தயிர் – ¼ கப்
பெரி பெரி மசாலா- 4 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – ¼ கப்
சோள மாவு – ¼ கப்
உப்பு – சுவைக்கேற்ப
பேக்கிங் பவுடர் – ½ டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை
*முதலில் சிக்கனை சுத்தமான கழுவி எடுத்துக் கொள்ளவும். அத்துடன், ஒரு டேபிள் ஸ்பூன் பெரி பெரி மசாலா, தயிர், எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
*அடுத்ததாக, மைதா மாவு, சோள மாவு, பெரி பெரி மசாலா 2 டேபிள் ஸ்பூன் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
*இப்போது, ஊற வைத்த சிக்கனை எடுத்து தயார் செய்து வைத்துள்ள மாவு கலவையில் பிரட்டி எடுக்கவும்.
*அடுப்பில் வாணலியை வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
*எண்ணெய் நன்கு சூடானதும், அதில் பிரட்டி வைத்த சிக்கனை போட்டு 5 நிமிடங்களுக்கு மட்டும் பொரித்து விட்டு எடுத்து விடவும்.
*பின்னர் மீண்டும் எண்ணெயை சூடேற்றி, பொரித்த சிக்கனை சேர்த்து 3 முதல் 4 நிமிடத்திற்கு மீண்டும் பொரித்தெடுக்கவும்.
*பரிமாறுவதற்கு முன்பு சிறிது பெரி பெரி மசாலாவை தூவி பரிமாறினால் சுவையான பெரி பெரி சிக்கன் மசாலா சுவைக்க தயார்.
*ஒரு முறை இந்த ரெசிபியை வீட்டில் செய்து பாருங்கள். பின்னர், பெரி பெரி சிக்கனை ஹோட்டலில் வாங்குவதை மறந்து விடுவீர்கள்.