Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

சுண்ட வத்தக்குழம்பு!!!

A
Admin User
Journalist
December 06, 2021 1 min read 24 views
சுண்ட வத்தக்குழம்பு!!!

சுண்ட வத்தல் குழம்பு ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதமாக வைப்பது வழக்கம். இங்கு எனது ஸ்டைல் வத்தக்குழம்பை தங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன். சமையல் செய்ய புதிதாக பழகுபவர்களுக்கு இது சற்று சுலபமானதாக இருக்கும். பேச்சுலர்ஸ் கூட இந்த குழம்பை ட்ரை செய்து பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்

சுண்ட வத்தல் – 15 – 20 எண்ணிக்கை

சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 10 பல்

குழம்பு மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து எடுத்துக்கொள்ளவும்

உப்பு - சுவைக்கேற்ப

தாளிக்க

நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – ¼ டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ¼ டீஸ்பூன்

வெந்தயப்பொடி – ¼ டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

*முதலில் ஒரு வாணலியை அடுப்பில் சூடானதும், எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

*கடுகு வெடித்ததும், கறிவேப்பிலை சேர்த்து, பின்னர் வெந்தயப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து லேசாக கிளறி விடவும்.

*அடுத்ததாக சுண்ட வத்தலையும், பூண்டையும் சேர்த்து சிறிது வதக்கிய பிறகு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் வதங்கி கண்ணாடி போல் ஆனதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.

*தக்காளி நன்கு மசிந்ததும், அத்துடன் மிளகாய் தூள் சேர்த்து சிறிது வதக்கவும்.

*மிளகாய் தூள் சேர்த்ததும், எண்ணெய் பிரிவது போல் வரும் சமயம் சிறிது நீர் சேர்க்கவும். (மிளகாய் தூள் சேர்க்கும் போது அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொள்ளவும். இல்லையெனில், மிளகாய் தூள் கரிந்து விடும்)

*ஊற்றிய நீர் கொதிக்கும் போது புளி கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு போடவும்.

*குழம்பு கெட்டியாக வேண்டுமென்றால் மிகவும் குறைவான நீர் சேருங்கள். இல்லையென்றால், வேண்டிய அளவிற்கு நீர் சேர்த்துக்கொள்ளலாம்.

*இப்போது குழம்பை மூடி வைத்து, மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும்.

*குழம்பு தயாரானது என்றால், குழம்பின் மேல் எண்ணெய் மிதக்கத் தொடங்கும்.

*சூடான சாதத்திற்கு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்.

VINCENT CHASE EYEWEAR By Lenskart | Full Rim Round Sunglasses| Polarized And 100% UV Protected | Men & Women
Recommended for You
VINCENT CHASE EYEWEAR By Lenskart | Full Rim Round Sunglasses| Polarized And 100% UV Protected | Men & Women

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க