Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

சம்பல் சிக்கன்!!!

A
Admin User
Journalist
January 18, 2022 1 min read 36 views
சம்பல் சிக்கன்!!!

சிக்கனை வைத்து எப்போதும் நம் ஊர் ஸ்டைலில் சமைத்தது போதும். இப்போது மலேசியன் ரெசிபி ஒன்றை வீட்டிலேயே செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். ஆமாம், இந்த கட்டுரையில் நாம் இப்போது மலேசியாவில் பிரபலமான ரெசிபி சம்பல் சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள போகிறோம். இதன் ஸ்பெஷலே ஒரு சாஸில் சிக்கனை வேக வைப்பது தான். இதை வீட்டிலேயே எளிய முறையில் இதை செய்திடலாம்.

தேவையான பொருட்கள்:

சம்பல் செய்வதற்கு…

  • சின்ன வெங்காயம் - 10
  • வெங்காயம் - 1 (நறுக்கியது)
  • வரமிளகாய் - 10 முதல் 15
  • இஞ்சி - 1 சிறிய துண்டு
  • பூண்டு - 6 பல்
  • லெமன் கிராஸ் - 1
  • உப்பு - சுவைக்கேற்ப
  • நாட்டுச் சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
  • புளி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • எண்ணெய் - 1/4 கப் சிக்கன்

சிக்கன் சம்பல் செய்வதற்கு…

  • சம்பல் - 1 கப்
  • எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
  • தேங்காய் பால் - 1 கப்
  • துருவிய தேங்காய் - 1/4 கப் (வறுத்தது)
  • பட்டை - 1 துண்டு
  • ஏலக்காய் - 4
  • கிராம்பு - 4
  • அன்னாசிப்பூ - 1
  • லெமன் கிராஸ் - 2
  • எலுமிச்சை இலைகள் - 2

செய்முறை:

  • முதலில் ஒரு மிக்சர் ஜாரில் புளி பேஸ்ட் மற்றும் நாட்டுச் சர்க்கரையைத் தவிர சம்பல் செய்ய தேவையான மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின்பு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
  • பின்பு அதில் நாட்டுச்சர்க்கரை மற்றும் புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வேக வைக்கவும்.
  • சம்பல் ஓரளவு கெட்டியானதும், அதை இறக்கி குளிர வைத்து ஜாரில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளலாம். தேவைப்படும் போது இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இப்போது சம்பல் சிக்கன் செய்ய முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் சம்பலை எடுத்து ஊற்றி அத்துடன் மசாலா பொருட்களை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  • பிறகு அதில் சுத்தம் செய்ய சிக்கனை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.
  • பின்னர், மூடியைத் திறந்து, அதில் லெமன் கிராஸ், எலுமிச்சை இலைகள், தேங்காய் பால் சேர்த்து கிளறி, 10 நிமிடம் வேக வைக்கவும்.
  • அடுத்து அதில் வறுத்த தேங்காயை சேர்த்து கிளறி, மீண்டும் சில நிமிடங்கள் வேக வைத்து இறக்கினால், சுவையான சம்பல் சிக்கன் தயார்.

Image Courtesy: yummytummyaarthi

MI Xiaomi 22.5W Fast Charger with USB-C Cable, Quick Charge 3.0 Power Adapter Compatible with Redmi Note Series, Poco, Mi, Any Type C Devices
Recommended for You
MI Xiaomi 22.5W Fast Charger with USB-C Cable, Quick Charge 3.0 Power Adapter Compatible with Redmi Note Series, Poco, Mi, Any Type C Devices

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க