குளிர்காலத்தில், மக்கள் சூடான பொருட்களை சாப்பிடவும் குடிக்கவும் விரும்புவார்கள். பொதுவாக, அனைவரும் கரும்பு சாறை கோடைகாலத்தில் குடிப்பதையே விரும்புவர். ஆனால், குளிர்காலத்தில் கரும்பு சாறு குடிப்பது உடலுக்கு மிகுந்த நன்மை அளிக்கும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இப்போது குளிர்காலத்தில் கரும்பு சாறு குடிப்பதனால் கிடைக்க நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இது குளிர்காலம் என்பதால், ஐஸ் போடாமல் ஜூஸ் குடிப்பது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மிகுந்த மன அழுத்தத்தை உணருகிறீர்கள், சுவாசிப்பதில் கொஞ்ச சிரமம் இருக்கிறது போன்ற பிரச்சனை எதாவது இருந்தால் கரும்பு சாறு குடிக்கவும். இந்த அறிகுறிகள் அனைத்தும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை குறிக்கும் அறிகுறிகளாக கூறப்படுகிறது. கரும்பு சாறு நோய் எதிர்புப சக்தியை அதிகரிக்கும். நீங்கள் தினமும் கரும்பு சாறு குடித்து வந்தால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
எலும்புகளுக்கு பலம் தரும்
கரும்புச் சாற்றில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளஉ. இது உடலின் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.
கல்லீரலுக்கு சிறந்தது
ஒருவருக்கு மஞ்சள் காமாலை இருந்தால் கரும்பு சாறு கொடுக்கப்படுகிறது. ஏனென்றால், இது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. உண்மையில், இது கல்லீரலில் உள்ள அனைத்து பிரச்சனைகளை நீக்குவதோடு, கல்லீரல் சரியாக செயல்படவும் உதவுகிறது. உண்மையில், கரும்பு சாறு சிறுநீரக கல்லீரல் இயக்கத்தை சீராக்கி, சிறுநீரக பாதை தொற்றுநோய்களைத் தடுக்க மிகவும் உதவியாக இருக்கிறது.
மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்
கரும்பில் கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, பொட்டாசியம் என அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நல்ல அளவில் உள்ளன. ஒரு கிளாஸ் கரும்பு சாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும் சக்தியை உங்கள் உடலில் நிரப்புகிறது என்று கூறப்படுகிறது. இது உங்கள் மனநிலையை சீராக வைத்திருக்க முடியும்.