Friday, August 07, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

ரம்ஜான் ஸ்பெஷல் : மட்டன் பிரியாணி!!!

A
Admin User
Journalist
April 02, 2022 5 min read 143 views
ரம்ஜான் ஸ்பெஷல் : மட்டன் பிரியாணி!!!

ரம்ஜான் வந்தாலே எல்லாருக்குமே நினைவிற்கு வருவது பிரியாணி தான். அதுவும் பாய் வீட்டு பிரியாணி என்றால், வேண்டாம் என்று கூறாமல் அள்ளி அள்ளி சாப்பிடும் அளவிற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். ஒரு மாத கால நோன்பிற்கு பிறகு உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவருக்கும் பகிர்ந்தளிந்துவிட்டு சாப்பிடுவதாலோ என்னவோ அவ்வளவு ருசியாக உள்ளது. முஸ்லீம் வீட்டு பிரியாணி போல ருசியான பிரியாணியை அனைவரும் செய்ய வேண்டும் ஆசைப்படுவார்கள். அவர்களுக்காகவே இந்த ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:
மட்டன் செய்ய:
மட்டன் – 1 கிலோ
வெங்காய பேஸ்ட் – 4 டேபிள் ஸ்பூன்
பாதாம் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தயில் – அரை கப்
புதினா (பொடியாக நறுக்கியது) – 1 கப்
தேங்காய் பால் – அரை கப்
மல்லி தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
சாதம் செய்ய:
பாசுமதி அரிசி – 2 கப்
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 4 கப்

செய்முறை:

*முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
*கழுவி வைத்த மட்டனுடன், தயிர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து 2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
*இப்போது, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், வெங்காய பேஸ்ட் சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும்.
*வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும், அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
*பின்பு, பாதாம் பேஸ்ட், மல்லி தூள், மிளகு தூள், கரம் மசாலா, தேங்காய் பால் ஆகியவற்றை சேர்த்து ஒரு 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
*மசாலா நன்கு வதங்கியதும், ஊற வைத்த மட்டன் மற்றும் நறுக்கிய வைத்துள்ள புதினா, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, மிதமான தீயில் வைத்து விடவும்.
*மட்டன் உப்பு சேர்த்தவுடன் நீர் விட்டு வரும். அந்த நீர் நன்கு வற்றியதும் சிறிது நீர் சேர்த்து மூடி வைத்து மட்டன் நன்கு வேகும் வரை 40 நிமிடங்களுக்கு வேக விடவும்.
*அரிசியை நீர் ஊற்றி கழுவி, வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
*இப்போது, பிரியாணி செய்வதற்கு ஏற்ற அளவிலான குக்கர் ஒன்றை அடுப்பில் வைத்து, சாதத்திற்கு தேவையான அளவு நீர் ஊற்றவும்.
*அத்துடன், நெய், கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து நீரை நன்கு கொதிக்க விடவும்.
*இப்போது கொதிக்கும் நீரில், அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, குறைவான தீயில் குக்கரை மூடி வைத்து 2 முதல் 3 விசில் விட்டு இறக்கவும்.
*கேஸ் முழுவதும் அடங்கியதும் குக்கரை திறந்து, ஒரு பாத்திரத்தில் சிறிது சாதத்தை போட்டு, அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள மட்டனை சிறிது பரப்பு, மீண்டும் சிறிது சாதம் வைத்து, மீதமுள்ள மட்டனை பரப்பு அப்படியே ஒரு மூடி போட்டு மூடி விடவும்.
*இறுதியாக, அந்த பாத்திரத்தை அடுப்பில் குறைந்த தீயில் 5 நிமிடங்களுக்கு வைத்து இறக்கினால், பரிமாறுவதற்கு தயாரான சூடான சூப்பரான மட்டன் பிரியாணி தயார்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,750
தங்கம் (24k)
1 கிராம்
₹14,438
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க