Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

மொறுமொறு இறால் வடை!!!

A
Admin User
Journalist
May 07, 2022 1 min read 27 views
மொறுமொறு இறால் வடை!!!

இந்த வார விடுமுறையில் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது வித்தியாசமான அசைவ ஸ்நாக்ஸ செய்து தர வேண்டுமா? அப்படியெனில், எல்லோருக்கும் பிடித்த இறாலை வைத்து ஒரு வடை செய்து கொடுத்து அசத்துங்கள். மாலை வேளையில் இதை செய்து கொடுத்தால் எல்லோரும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடிப்பார்கள். சரி, இறாலை வைத்து வடை எப்படி செய்வதென்று இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு…

  • இறால் - 1/4 கிலோ
  • துருவிய தேங்காய் - 1/4 கப்
  • சின்ன வெங்காயம் - 6
  • இஞ்சி - 1/2 இன்ச்
  • பூண்டு - 5 பல்
  • பச்சை மிளகாய் - 2
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப

பிற பொருட்கள்:

  • பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/4 கப்
  • அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
  • கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

  • முதலில் இறாலை நன்கு சுத்தம் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்பு சுத்தம் செய்த இறாலை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் தேங்காய் மற்றும் அரைப்பதற்கு கொடுத்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த இறாலை மசாலாசை ஒரு பௌலில் மாற்றி, அத்துடன் அரிசி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்.
  • இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பிசைந்து வைத்துள்ள இறால் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வடை மாதிரி தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இறால் வடை பரிமாற தயார்.
  • இந்த இறால் வடையை தேங்காய் எண்ணெயில் சுட்டெடுத்தால் மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும், இறாலை போடுதற்கு முன்பு எண்ணெயில் ஒரு கொத்து கறிவேப்பிலையை போட்டு பின்னர் இறாலை போட்டால் சுவை அருமையாக இருக்கும்.

Image Courtesy: archanaskitchen

Memory Foam Car Seat Back Support, Orthopedic Lumbar Back Rest for Back Pain Relief, Back Support Pillow for Office ChairCarBack Support Pillow
Recommended for You
Memory Foam Car Seat Back Support, Orthopedic Lumbar Back Rest for Back Pain Relief, Back Support Pillow for Office ChairCarBack Support Pillow

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க