தினமும் மாலை வேளையில் வீட்டில் உள்ளவர்களுக்கு காபி, டீ உடன் ஏதாவது ஸ்நாக்ஸ செய்து தர வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து கொடுத்தே ஆக வேண்டும். அப்போது தான் அவர்களை சமாளிக்க முடியும். சரி, எப்போம் போல் இல்லாமல் உருளைக்கிழங்கை வைத்து ஒரு பக்கோடா செய்து கொடுங்களேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். செய்வதும் சுலபம் என்பதால் சீக்கிரம் செய்து முடித்திடலாம். சரி வாருங்கள், உருளைக்கிழங்கில் பக்கோடா எப்படி செய்வதென்று இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு - 1 கப்
  • சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)
  • உருளைக்கிழங்கு - 1 (தோலுரித்து துண்டுகளாக நறுக்கப்பட்டது)
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
  • சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • சாட் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பௌலில் எண்ணெயைத் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து, சிறிது சிறிதாக நீர் ஊற்றி சற்று கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • பிரட்டிய பக்கோடா கலவையை ஒரு 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் நன்கு சூடானதும், அதில் தயார் செய்து ஊற வைத்த மாவை பக்கோடா மாதிரி சிறு சிறு உருண்டைகளாக போட்டு, பொன்னிறம் ஆகும் வரை பொரித்தெடுக்கவும்.
  • இந்த பக்கோடைவை கெட்சப் உடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.

Image Courtesy: yummytummyaarthi