Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

வேர்க்கடலை சட்னி!!!

A
Admin User
Journalist
January 10, 2022 1 min read 18 views
வேர்க்கடலை சட்னி!!!

வேர்க்கடலை சட்னி இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும். 2 தோசை சாப்பிடுபவர்கள் கூட 4 தோசை சாப்பிட தோன்றும். செய்வது கூட மிகவும் சுலபம் தான். சமைக்க தெரியாதவர்கள் கூட இதனை ஈஸியாக செய்து விடலாம். வாருங்கள், செய்முறை பார்ப்போம்…

தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 1 கப் (வறுத்தது)
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
பூண்டு – 4 பல்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - சுவைக்கேற்ப

தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1 (விதை நீக்கியது)
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை
*முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து நிறம் மாறும் அளவிற்கு மட்டும் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். (வறுத்த வேர்க்கடலை என்றால் அதனை அப்படியே உபயோகிக்கலாம்)
*பின்னர், அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாயை சேர்த்து சற்று வறுத்துக் கொள்ளவும். (நேரமில்லாதவர்கள் வறுக்காமல் கூட அப்படியே சேர்க்கலாம்)
*இப்போது, ஒரு மிக்ஸர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை, தேங்காய், பூண்டு, புளி, காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
*காய்ந்த மிளகாய் வறுத்த அதே வாணலி மற்றும் எண்ணெயிலேயே சட்னிக்கு, தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளலாம்.
*ஒருமுறை இந்த சட்னி செய்து பாருங்கள். அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

MI Xiaomi 22.5W Fast Charger with USB-C Cable, Quick Charge 3.0 Power Adapter Compatible with Redmi Note Series, Poco, Mi, Any Type C Devices
Recommended for You
MI Xiaomi 22.5W Fast Charger with USB-C Cable, Quick Charge 3.0 Power Adapter Compatible with Redmi Note Series, Poco, Mi, Any Type C Devices

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க