வறட்டு இருமல் என்பது காற்றுப்பாதையில் இருக்கும் ஒருவித எரிச்சலால் உண்டாகக் கூடியது. தூக்கம் முதல் முக்கிய வேலை வரை அனைத்தையும் இத்தகைய வறட்டு இருமல் கெடுக்கக்கூடும். பெரும்பாலானர்கள் இதனால் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர் என்றே கூற வேண்டும். சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை, தூசி போன்ற பல்வேறு காரணங்களால் வறட்டு இருமல் ஏற்படக்கூடும். இதற்காக எத்தனை மாத்திரை மருந்தை சாப்பிட்டாலும் அது சரியாகவில்லை என்பதே பலரது கவலையாக உள்ளது. அவர்களுக்கு ஒரு தீர்வு சொல்லும் விதமாக இந்த கட்டுரையை பதிவிட்டுள்ளேன்.
வறட்டு இருமலை போக்கக்கூடிய ஓர் அற்புத பானத்தை பற்றி இப்போது பார்க்கலாம். அது தான் “துளசி டீ“. பொதுவாகவே துளசி பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ஓர் அற்புத மூலிகை என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். துளசி குடிப்பதன் மூலம் இருமல் குறையும், தொண்டை வலி நீங்கும், எரிச்சல் தணியும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இன்னும் கூட கூறிக்கொண்டே போகலாம். எனவே, வறட்டு இருமலால் அவதிப்பட்டால் மாத்திரை மருந்தை சாப்பிடாமல், தினமும் ஒரு டம்ளர் துளசி டீ குடித்து வாருங்கள். பிரச்சனையின் தீவிரம் குறைவதை நீங்களே உணர முடியும்.
வறட்டு இருமல் ஏற்படுவதற்கான சில காரணங்கள்
1.ஆஸ்துமா
2. காஸ்ட்ரோஈசோபேகியல் எதிர்வினை நோய்
3.வைரஸ் தொற்று
4.சுற்றுச்சூழல் மாசு
5.புகைப்பிடித்தல்
6.மூச்சுக்குழாய் அழற்சி
வறட்டு இருமலுக்கு சிறந்த தீர்வு – துளசி டீ
துளசியானது புதினாவின் குடும்பத்தை சார்ந்தது. ஆயுர்வேதம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகளில் துளசி முக்கிய இடத்தை வகிக்கிறது. துளசியில் ஆன்டிசெப்டிக் காரணிகளை தவிர அனால்ஜெசிக் காரணிகளும் உள்ளன. அவை வறட்டு இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, பல்வேறு நுரையீரல் தொடர்பான நோய்களை சரி செய்திட உதவுகிறது. இது இம்யூனோமோடூலேட்டரி (நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க) மற்றும் சுவாச மண்டலத்திற்கு நிவாரணம் வழங்கும் ஆன்டிடூசிவ் (இருமலை நீக்குசது) போன்ற காரணிகளையும் கொண்டுள்ளது. மேலும், இதிலுள்ள சில எண்ணெய்கள் நெஞ்சில் உள்ள அடைப்புகளை சரி செய்திடும்.
துளசி டீ தயாரிக்கும் முறை
*வீடுகளிலேயே சுலபமாக வளர்க்கக்கூடிய செடிகளில் ஒன்று துளசி. எனவே, அருகே உள்ள துளசி செடியில் இருந்து 5 - 6 துளசி இலைகளை பறித்து சுத்தமான நீரில் நன்கு கழுவி கொள்ளவும்.
*முதலில், ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கப் நீர் சேர்த்து பறித்து வைத்த துளசி இலைகள் ஐந்தை போடவும்.
*அடுப்பைக் குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வரை நீரை நன்கு கொதிக்க விடவும். பாத்திரத்தை மூடி வைத்து, துளசியில் சாறு நீரில் நன்கு இறங்கும் வரை அப்படியே விடவும்.
*பின்னர், அடுப்பை அணைத்து, நீரை ஆற வைத்து வடிகட்டவும்.
*இப்போது துளசி டீ தயார். இதனை வெதுவெதுப்பான் சூட்டில் குடிக்க வறட்டு இருமல் காணாமல் போகும்.
*வேண்டுமென்றால், இந்த டீயில் பிற இருமலை போக்கக்கூடிய பொருட்களாக ஏலக்காய், இஞ்சி, மிளகு மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து கூட குடிக்கலாம். தினமும் இந்த டீயை குடித்து வர வறட்டு இருமல் இருந்து விடுபடலாம்.
இருமல் ஏற்படுவதற்கு எந்த காரணமாக இருந்தாலும், இந்த துளசி டீ நல்லதொரு தீர்வை கொடுக்கும் என்பதை கூற விரும்புகின்றேன். நிச்சயம் முயற்சித்து பாருங்கள்…