Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

மட்டன் சுக்கா!!!

A
Admin User
Journalist
June 07, 2022 4 min read 75 views
மட்டன் சுக்கா!!!

மட்டன் சுக்கா என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு மட்டன் ரெசிபி. ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மட்டன் சுக்கா செய்வார்கள். இப்போது சுலபமான முறையில் மட்டன் சுக்கா எப்படி செய்வதென்று இப்போது தெரிந்த கொள்ள போகிறோம். பேச்சுலர்ஸ் கூட இதை சுலபமாக செய்திடலாம். இந்த மட்டன் சுக்கா சாப்பாடு, ரசம் மற்றும் சப்பாத்தி போன்றவற்றிற்கு அருமையாக சைடு டிஷ்ஷாக இருக்கும். சரி வாருங்கள், மட்டன் சுக்கா எப்படி செய்வது, அதற்கு தேவையான பொருட்கள் என்னென்னவென்று இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்

  • மட்டன் - 500 கிலோ
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • மிளகு - 2 டீஸ்பூன்
  • மல்லி - 1 டீஸ்பூன்
  • வரமிளகாய் - 4
  • சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 4
  • கறிவேப்பிலை - சிறிது
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - சுவைக்கேற்ப
  • கொத்தமல்லி - ஒரு கைளவு

செய்முறை

  • முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
  • பின்னர், மட்டன் மசாலாவை தயார் செய்ய ஒரு மிக்சர் ஜாரில் மிளகு, வரமிளகாய், மல்லி ஆகியவற்றை ஒன்றாக எடுத்து நன்கு பொடியாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்பு குக்கரை அடுப்பில் வைத்து அதில் மட்டனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், அரைத்த மசாலா பொடி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி மூடி வைத்து 5 முதல் 6 விசில் விட்டு இறக்கிடவும்.
  • குக்கர் விசில் தானாக அடங்கியதும் குக்கரை திறக்கவும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும்.
  • இப்போது குக்கரில் உள்ள மட்டனை எடுத்து வாணலியில் சேர்த்து, நீர் வற்றும் வரை நன்கு வேக வைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையா மட்டன் சுக்கா தயார்.

Image Courtesy: steffisrecipes

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க