Friday, August 07, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

டேஸ்டி மசாலா பாஸ்தா!!!

A
Admin User
Journalist
April 29, 2022 6 min read 149 views
டேஸ்டி மசாலா பாஸ்தா!!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தினந்தோறும் விதவிதமாக எதாவது செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லதரசிகள் இருக்கிறார்கள். ஒருவேளை உங்களுக்கு தினமும் காரசாரமான ஏதாவது ஒரு உணவை சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருந்தால், நீங்கள் மசாலா பாஸ்தா செய்து சுவைத்து பார்க்கலாமே. மசாலா பாஸ்தா செய்வது மிகவும் எளிமையானது. அதிலும், இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். எனவே, இன்று மசாலா பாஸ்தா செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

மசாலா பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்

  • தண்ணீர் - 2 லிட்டர்
  • உப்பு - 1 டீஸ்பூன்
  • பாஸ்தா - 2 கப்

பாஸ்தா சாஸ் செய்ய...

  • ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • வெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • பூண்டு - 2 (பொடியாக நறுக்கியது)
  • மிளகாய் - 1 (கீறியது)
  • இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
  • வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
  • தக்காளி அரைத்தது - 2 கப்
  • மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
  • சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  • உப்பு - 1/2 தேக்கரண்டி
  • ஸ்வீட் கார்ன் - 2 டீஸ்பூன்
  • கேரட் - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • குடைமிளகாய் - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
  • பாஸ்தா வேகவைத்த தண்ணீர் - 1/2 கப்
  • தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
  • மிக்ஸ்டு ஹெர்ப் - 1 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
  • சீஸ் - 1/2 கப் (துருவியது)
  • கொத்தமல்லி - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை

  • முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • தண்ணீர் கொதித்தவுடன், அதில் 2 கப் பாஸ்தா சேர்த்து 7 நிமிடங்கள் அல்லது பாஸ்தா வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
  • அதன் பிறகு, பாஸ்தாவை வடிகட்டி குளிர்ந்த நீரில் அதை கழுவியதும் தனியாக எடுத்து வைக்கவும்.
  • இப்போது பாஸ்தா சாஸ் தயார் செய்ய, ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஆலிவ் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடேற்றவும்.
  • அதன் பிறகு நறுக்கிய இஞ்சி, பூண்டு, கீறிய மிளகாய் சேர்த்து வதக்கியதும் வெங்காயத்தை சேர்த்து குறைவான தீயில் அடுப்பை வைத்து, வெங்காயம் கண்ணாடி போல் ஆகும் வரை வதக்கவும்
  • பின்னர், ​​மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குறைவான தீயில் வதக்கவும்.
  • அதன் பிறகு அரைத்த தக்காளி பேஸ்ட் 2 கப் சேர்த்து நன்கு வதக்கவும். இந்த கலவை கெட்டியாகி எண்ணெய் பிரியும் வரை நன்கு சமைக்க வேண்டும்.
  • மசாலா கலவை நன்கு வெந்தவுடன்மல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கக்கவும்.
  • அதன் பிறகு, மசாலாவை குறைந்த வெப்பத்தில் வாசனை வரும் வரை வதக்கவும்.
  • இப்போது ஸ்வீட் கார்ன், கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  • இதற்குப் பிறகு பாஸ்தா வேகவைத்த தண்ணீர், தக்காளி சாஸ், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும்.
  • மசாலா நன்கு ஒன்று சேரும் வரை கிளறியதும் அதில் துருவிய சீஸ் சேர்த்து நன்கு கலந்து விட்டால் சீஸி பாஸ்தா சாஸ் தயார்.
  • இதற்குப் பிறகு வேகவைத்த பாஸ்தாவைச் சேர்த்து நன்கு கலக்கவும். பாஸ்தா சாஸ் பாஸ்தாவுடன் நன்கு கலந்தவுடன் கடைசியாக சிறிது சீஸ் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவைாயன மசாலா பாஸ்தா தயார்…
Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,750
தங்கம் (24k)
1 கிராம்
₹14,438
வெள்ளி
1 கிராம்
₹250
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

தினசரி உடற்பயிற்சி செய்கிறீர்களா?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க