இன்றைய காலக்கட்டத்தில் பலரும் தங்களது கோபத்தாலேயே பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். தற்போதைய சூழலில் இருக்கக்கூடிய அழுத்தமான மனநிலையில், பலருக்கும் கோபம் என்பது கட்டுக்கு அடங்காமல் வருகிறது. இத்தகைய கோபம் பல்வேறு வகையான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனை அறிந்து தங்களது கோபத்தை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டுமென்று முயல்பவரா நீங்கள்? அப்படியெனில், எந்தவிதமான மருந்துகளையும் உட்கொள்ளாமல் அன்றாட உணவுகளின் மூலம் மட்டுமே உங்களது கோபத்தைக் கட்டுப்படுத்திட முடியும். அதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்…

கோபத்தைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகள்

பழங்கள்
கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்று தோல்வி அடைந்தவரா நீங்கள்? அப்படியெனில், உங்கள் உணவில் முடிந்தவரை அதிக பழங்களை சேர்க்க முயற்சிக்க வேண்டும். அதன் மூலம், உங்க்ள கோபம் தானாக குறைந்திடும்.

பழச்சாறு
உங்களுக்கு அதிக அளவில் கோபம் வரும்போது எல்லாம் அவற்றை இயற்கையான முறையில் குறைக்க முயற்சிப்பதே நல்லது. அதற்கு முதலில் கோபத்தை ஏற்படுத்திய இடத்தில் இருந்து உடனே விலகி சென்று பழச்சாறு அல்லது வாழைப்பழ ஸ்மூத்தி போன்றவற்றை குடியுங்கள். இது உங்கள் கோபத்தை நிச்சயம் குறைத்திடும்.

இறைச்சி, காய்கறிகள்
உங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறது என்றால் உங்களது உணவில் மீன், கோழி, முட்டை, பச்சை காய்கறிகள் போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள். ஏனென்றால், இவற்றில் உள்ள டோபமைன் என்று நியூரோமோடுலேட்டரி மூலக்கூறு உங்கள் கோபத்தை தனித்து நிதானமான சூழலுக்கு உங்களை கொண்டு வரும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம்
உங்களது ஏற்படக்கூடிய கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், மீன், வால்நட், காளான், விதைகள் போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும்.

பருப்பு வகைகள், கீரைகள்
ஒருவர் தனது கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், அவர்கள் தங்களது உணவில் கீரை வகைகளையும், பாதாம், முந்திரி போன்ற பருப்பு வகைகளையும் அதிகம் சாப்பிட வேண்டும். பருப்பு வகைகளும், கீரை வகைகளும் சிறப்பான தூக்கத்தை பெறவும் உதவிடும்.

சாக்லேட்
உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால், டார்க் சாக்லேட் அல்லது ஒயிட் சாக்லேட் சாப்பிடுங்கள். கோபத்தில் சாக்லேட் சாப்பிடுவது அதனை உடனே குறைத்திட உதவும். எனவே, அதிகமாக கோபப்படுபவர் எப்போதும் உங்களது பையில் சாக்லேட் வைத்திருக்க பழகி கொள்ளுங்கள். இது நிச்சயம் கோபத்தைத் தணிக்க உதவிடும்.