Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
சமையல்

முட்டை கொத்து பாஸ்தா!!!

A
Admin User
Journalist
January 21, 2022 4 min read 51 views
முட்டை கொத்து பாஸ்தா!!!

குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒன்றை ஆரோக்கியமான முறையில் செய்து கொடுத்தால நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கு ஏற்ற ஒரு ரெசிபி தான் முட்டை கொத்து பாஸ்தா. இது செய்வது மிக மிக எளிதானது. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் கூட இதை வேண்டாம் என்று கூறாமல் சாப்பிடுவார்கள். வாருங்கள், இப்போது முட்டை கொத்து பாஸ்தா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்வோம்…

தேவையான பொருட்கள்:

  • பாஸ்தா - 1 கப்
  • முட்டை - 2
  • பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிது
  • உப்பு - சுவைக்கேற்ப
  • தண்ணீர் - தேவையான அளவு
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • பூண்டு - 3 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பாஸ்தா வேகும் அளவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க விடவும். நீர் கொதித்ததும் அதில் பாஸ்தா சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்த மிதமான தீயில் வேக விடவும்.
  • பாஸ்தா நன்கு வெந்தவுடன் அதை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசிவிடடு தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
  • பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது போட்டு நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வெந்தவுடன் அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.
  • அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  • இப்போது அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விடவும்.
  • முட்டை பாதி வெந்தவுடன், அதில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டை கொத்து பாஸ்தா தயார்.

Image Courtesy: sharmispassions

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை
வாசிக்க