Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

காலை உணவா இந்த பொருட்களை மறந்தும் சாப்பிடாதீங்க... அப்பறம் பிரச்சனை உங்களுக்கு தான்...

A
Admin User
Journalist
December 07, 2021 1 min read 23 views
காலை உணவா இந்த பொருட்களை மறந்தும் சாப்பிடாதீங்க... அப்பறம் பிரச்சனை உங்களுக்கு தான்...

ஒவ்வொருவரும் காலையில் எழுந்ததும் ஒரு மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிடுட வேண்டும் என்று சொல்வதுண்டு. மேலும், காலை உணவை மட்டும் ஒருபோதும் தவறவே கூடாது. ஏனெனில், அந்த நாளைக்கான முழு ஆற்றலையும் அது தான் நம் உடலுக்கு தருகிறது. அப்படி நாம் சாப்பிடும் காலை உணவில் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது என்று சில வரைமுறை உண்டு. எப்பொழுதும் காலையில் எளிதில் செரிக்கக்கூடிய உணவாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஒருசில குறிப்பிட்ட உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. அந்த உணவு ஆரோக்கியமானதாவே இருந்தாலும், வெறும் வயிற்றில் அதை சாப்பிடுவதைத் தவிர்த்தாக வேண்டும். ஏனெனில், அது விஷத்துக்கு சமம் என்று கூறுகின்றனர். சரி, இப்பொழுது அதை பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

எந்தெந்த உணவுகளை எல்லாம் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது என்பதைப் பார்ப்போம்…

வாழைப்பழத்துடன் பால்
வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானதாக தான் கருதப்படுகிறது. இந்த காரணத்தால் பலர் காலை உணவில் அதை சாப்பிடுகின்றனர். ஆனால் நீங்கள் தினமும் வாழைப்பழத்துடன் பால் சாப்பிடுபவரானால், கவனமாக இருக்கவும். ஏனென்றால், இந்த இரண்டையும் ஒன்றாக வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். பாலுடன் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது, அவற்றில் உள்ள மக்னீசியம் இருமடங்காகி, மலச்சிக்கலை உண்டாக்கும். வேண்டுமானால் வாழைப்பழம் மற்றும் பால் சாப்பிடுவதற்கு முன்பி பிரட் சாப்பிடலாம்.

சிட்ரஸ் பழங்கள்
பெரும்பாலோர் காலை உணவாக பழங்களை சாப்பிட விரும்புவார்கள். ஏனெனில் பழங்களை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது, உடலுக்கு வேண்டிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும் என்பதற்காக. ஆனால் வெறும் வயிற்றில் அவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குறிப்பாக புளிப்புச் சுவை கொண்ட பழங்களான சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். வேண்டுமானால், பிரட் சாப்பிட பின்னர் சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம்.

தக்காளி
தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஆபத்தானதாக கருதப்படுகிறது. பெரும்பாலானோர் டயட் உணவாக காலையில் சாலட்டுகள் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் சாலட்டில் இனி தக்காளியை சேர்க்காதீர்கள். மருத்துவர்களின் கூறுவது என்னவென்றால், தக்காளியை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்துமாம். எனவே, தக்காளியை காலை உணவில் சேர்ப்பதைத் தவிர்த்திடுங்கள். அதுவும் தக்காளி ஜூலை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது கல் அபாயத்தை அதிகரிக்க செய்யுமாம். எனவே, இனி தக்காளியை காலை உணவில் தவிர்த்திடலாமே…

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கு இனிப்புச் சுவையைக் கொண்ட ஒரு குளிர்கால காய்கறி. இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் என்ன தான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும், அதை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள டானின்ஸ், பெக்டின் போன்றவை வாயு தொல்லை, அமில சுரப்பு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனையை உண்டாக்கும். எனவே, சர்க்கரைவள்ளிக் கிழங்கை காலை உணவில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

காரமான உணவுகள்
காரசாரமான உணவுகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதிலும், அது போன்ற உணவுகளை நேரம் காலம் பாராமல் அனைவரும் உண்பர். ஆனால், காரமான உணவுகளை எப்போதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனெனில், காரமான உணவுகளில் உள்ள மசாலாப் பொருட்கள் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். எனவே, எப்போதும் காரமான உணவுகளை காலை உணவின் போது எடுத்துக் கொள்ளாதீர்கள்.

இனிமேல் அந்த உணவுகளை உங்களின் காலை உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள்.

https://www.youtube.com/watch?v=GE0oQU6sgyE

HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)
Recommended for You
HP 15, 13th Gen Intel Core i3-1315U (12GB DDR4, 512GB SSD) FHD, Anti-Glare, Micro-Edge, 15.6''/39.6cm, Win11, M365 Basic(1yr)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க