Chettinad chicken ghee roast recipe: செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்துமே சுவையில் சிறந்தவை. அதிலும், செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் ரெசிபிகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அந்த வகையில், செட்டிநாடு சிக்கல் நெய் ரோஸ்ட் எப்படி செய்வதென்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் வீட்டில் இந்த ரெசிபியை செய்து கொடுத்து, வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இனி செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்டை ஹோட்டலுக்கு சென்று சாப்பிட வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே இதை சுலபமாக செய்து விடலாம். வாருங்கள், இப்போது தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்

  • சிக்கன் - 1 கிலோ
  • நெய்/வெண்ணெய் - 1/4 கப்
  • பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
  • கறிவேப்பிலை - சிறிது
  • உப்பு - சுவைக்கேற்ப

செட்டிநாடு மசாலாவிற்கு...

  • காஷ்மீரி வர மிளகாய் - 10
  • வரமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் - 2 டீஸ்பூன்
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
  • வரமிளகாய் - 5

ஊற வைப்பதற்கு…

  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • தயிர் - 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்னர், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் காஷ்மீரி வரமிளகாயை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இப்போது அதில் செட்டிநாடு மசாலாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வறுக்கவும்.
  • வறுத்த மசாலா பொருட்கள் அனைத்தும் ஆறியதும், அதை மிக்சர் ஜாரில் சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.
  • அடுத்ததாக, கழுவி வைத்துள்ள சிக்கனில் அரைத்த செட்டிநாடு மசாலா, தயிர், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, குறைந்தது 1 மணிநேரத்திற்காவது ஊற வைக்கவும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • பின்னர், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து 15-20 நிமிடம் சிக்கனை நன்கு வேக விடவும்.
  • சிக்கன் வேகும் போது அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விட்டபடி இருங்கள்.
  • சிக்கனின் மேற்புறம் நன்கு மொறுமொறுப்பான பதத்திற்கு வந்தவுடன், அதன் மேல் சிறிது கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் சுவைக்க தயார்…

Image Courtesy: steffisrecipes

சுவையான க்ரீன் சிக்கன் கிரேவி!!!

ரெண்டாரண்ட் ஸ்டைல் டிராகன் சிக்கன்!!!

ஆந்திரா ஸ்டைல் முருங்கைக்காய் சிக்கன் கிரேவி!!!