Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

கோடைகாலத்தில் காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சனையெல்லாம் ஏற்படுமாம்!!!

A
Admin User
Journalist
May 11, 2022 5 min read 52 views
கோடைகாலத்தில் காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சனையெல்லாம் ஏற்படுமாம்!!!

உலகில் டீ பிரியர்கள் எவ்வளவு அதிகமோ அதே அளவு காபி பிரியர்களும் இருக்கிறார்கள். ஆனால், சிலர் தினந்தோறும் டீ, காபி மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்தும் வருகிறார்கள். அப்படி, அதற்கு அடிமையாகி, எதற்கெடுத்தாலும் காபி, டீ குடிப்பது என்று இருக்கின்றனர். காலை எழுந்தவுடன் ஏதாவது சூடாக குடித்தால் நன்றாக இருக்கும் அதற்காக, காபியுடன் நாளை தொடங்குவார்கள். ஒரு நாளைக்கு எத்தனை முறை காபி குடிக்கிறீர்கள் என்பதை நீங்களே எண்ணி பாருங்கள். ஏனென்றால், அளவிற்கு அதிகமா காபி குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிப்பது போதுமான அளவு. அதற்கு மேல் குடிக்கும் ஒவ்வொரு கப் காபியும் உங்கள் உடலுக்கு கேடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிலும், கோடைகாலத்தில் அதிகமாக காபி குடிப்பது உடலுக்கு நல்லதே கிடையாது. இன்றைய காலக்கட்டத்தில் உட்கார்ந்தபடியே வேலை பார்க்கும் பலருக்கு, காபி ஒன்று தான் ஆதரவாக இருக்கிறது. இருப்பினும், அதற்காக நிறைய காபி குடிப்பதால் உடலிற்கு மட்டுமல்ல, மனதிற்கும் தீங்கு விளைவிக்கும். சரி, இப்போது இந்த கட்டுரையில், கோடைகாலத்தில் அதிகமாக காபி குடிப்பதால் என்னெ்ன தீமைகளைச் சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்…

உயர் இரத்த அழுத்தம்

மந்தமாக உணரும் வேளைகளில் ஒருவர் காபி குடிப்பதை விரும்புகின்றனர். ஆனால், ஒரு நாளைக்கு 3 கப் காபிக்கு மேல் குடிக்கும் போது, ஒருவருக்கும் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, குறைந்த அளவு காபியை மட்டுமே உட்கொள்ளுங்கள். குறிப்பாக, 2 கப் காபிக்கு மேல் ஒரு நாளைக்கு குடிக்காதீர்கள்.

கண் பார்வை குறைபாடு

எவர் ஒருவர் அளவிற்கு அதிகமாக காபி குடிக்கிறார்களோ அவர்களது உடலில் குளுக்கோமாவின் அசௌகரியத்தை சந்திக்க நேரிடும். குளுக்கோமா என்பது குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும் கண் நிலையாகும். காபி குடிப்பதால் இந்த பிரச்சனை அதிகரிக்கும். இதன் விளைவாக கண் பார்வை குறைபாடு ஏற்பட தொடங்கும். எனவே, கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அதிகமாக காபி உட்கொள்வதைத் தவிர்த்தாக வேண்டும்.

தூக்கமின்மை

அதிகப்படியான காஃபின் உடலுக்குள் செல்லும் போது, ஒருவருக்கு தூக்கமின்மை தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக, நாள் முழுவதும் 2 கப் காபி மட்டுமே குடிக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு மேல் காபி குடிக்கும் போது தூக்கமில்லாமல் அவதியுற நேரிடும்.

ஒற்றைத் தலைவலி

ஒரு நாளைக்கு 2 கப் காபிக்கு அதிகமாக குடிக்கும் போது, மைக்ரேன் பிரச்சனைகள் ஏற்பட தொடங்கும். உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருந்தால் அதிகமாக காபி குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். ஒருவேளை, உங்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை எதற்காக ஏற்படுகிறது என்ற சந்தேகம், இருந்தால் காபி குடிப்பதைக் குறைத்து பாருங்கள், தலைவலி பிரச்சனையும் குறைய தொடங்கும்.

உடல் உபாதைகள்

ஒரு நாளைக்கு அளவிற்கு அதிகமாக காபி குடிப்பதால் வாயு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதிகப்படியான காபி உடல் தொடர்பான பல பிரச்சனைகளை உண்டு பண்ணும். இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டுமெனில், குறைவான அளவு காபி குடிப்பது மட்டுமே.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க