Sunday, May 10, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

ஆன்மீக பயணத்தில் நடிகர் அஜித் குமார்...

A
Admin User
Journalist
September 16, 2022 3 min read 156 views
ஆன்மீக பயணத்தில் நடிகர் அஜித் குமார்...

இமயமலை பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நடிகர் அஜித், தற்போது கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். மோட்டார் பைக்கில் நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டுள்ள அஜித், ஆன்மீக பயணமாக இவ்விரண்டு கோயில்களுக்கும் சென்று வழிபட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்போது கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்கள் பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்…

கேதார்நாத் கோயில்

கேதார்நாத் கோயில் இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க சிவத்தலங்க தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டம் கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இந்த கோயில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளி வரை மட்டுமே திறந்திருக்கும்.

இக்கோயிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு மலை ஏறியே மட்டுமே இக்கோயிலுக்கு செல்ல முடியும். வடக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

பத்ரிநாத் கோயில்

பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டதில் உள்ள மலை வாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்வியதேசங்களுள் ஒன்றாகும். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டிற்கு ஆறு மாதங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,150
தங்கம் (24k)
1 கிராம்
₹14,858
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க