Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

அட்சய திருதியை அன்று உங்க ராசிப்படி இந்த பொருட்களை வாங்குவது மிகவும் அதிர்ஷ்டம்...

A
Admin User
Journalist
May 03, 2022 1 min read 19 views
அட்சய திருதியை அன்று உங்க ராசிப்படி இந்த பொருட்களை வாங்குவது மிகவும் அதிர்ஷ்டம்...

ஜோதிட சாஸ்திரத்தில் அக்ஷய திருதியைக்கு என்று அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஏனென்றால், இந்த நாளில் யாகம், பூஜை, தானம் போன்றவற்றை செய்வதன் மூலம் பெரும் அதிர்ஷ்டத்தை பெற்றிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனாலேயே இது ஒரு புனித பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மேலும், அக்ஷய திருதியை நாளில் தங்கள் மற்றும் வெள்ளி வாங்கினால் வாழ்வில் சகல செல்வ செழிப்பும் பெற்று வளமாக வாழ்ந்திடலாம் என்று மக்கள நம்புகின்றனர். இந்த ஆண்டில் மே 3ம் தேதியான இன்றைய தினம் அக்ஷய திருதியைக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்க முடியாதவர்கள், ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் வேறு எந்த பொருட்களை வாங்கினால் அதிர்ஷ்டத்தைப் பெற்றிட முடியும் என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் இப்போது பார்க்க போகிறோம்…

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், அக்ஷய திருதியை அன்று தங்கம், வெள்ளி வாங்க முடியவில்லை என்றால் சிவப்பு நிற பருப்பை வாங்கலாம். இதனை வாங்குவதன் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு பலமும் கிடைத்திடும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள், இன்றைய தினம் சிறு தானியங்களில் திணை அல்லது அரிசி வாங்குவது நன்மை பயக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியையும், வெற்றியையும் பெற்று தரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள், அக்ஷக திருதியை தினத்தன்று தங்கம் வாங்க முடியவில்லை என்றால், பச்சை நிற பருப்போ அல்லது கொத்தமல்லியோ வாங்கலாம். இதன்மூலம் அதிர்ஷ்டத்தைப் பெறலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களின் ஆட்சி பகவான் சந்திரன். எனவே, கடக ராசிக்காரர்கள் அக்ஷய திருதியை அன்று அரிசி அல்லது பால் வாங்கினால் அது உங்கள் வளர்ச்சிக்கு வித்திடும்.

சிம்மம்
சூரிக பகவானின் ராசியான சிம்ம ராசிக்காரர்கள் அக்ஷய திருதியை அன்று செப்பினால் ஆன சமையல் பாத்திரங்கள் அல்லது சிவப்பு நிற ஆடைகளை வாங்குவது சிறந்தது. இது உங்கள் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அக்ஷய திருதியை அன்று பாசி பருப்பு வாங்குவது அதிர்ஷ்டத்தைப் பெற்றிட உதவும். இதனால் நீங்கள் முன்னோர்களின் ஆசியைப் பெற்றிடலாம்.

துலாம்
அக்ஷய திருதியை அன்று, துலாம் ராசிக்காரர்கள் தங்கம் வாங்க முடியாவிட்டால், அரிசி அல்லது சர்க்கரை வாங்கினால் போதும். அதே அதிர்ஷ்டத்தை பெற்றிடலாம்.

விருச்சிகம்
அக்ஷய திருதியை அன்று வெல்லம் அல்லது தண்ணீர் வாங்குவது விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். இதன்மூலமாக நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க செய்திடலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அக்ஷய திருதியை நாளில் மஞ்சள் நிற பொருட்கள் அல்லது வாழைப்பழம் வாங்குவது மிகவும் சிறந்தது. இது உங்கள் தரத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்திடும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள், இன்றைய நாளில் உளுத்தம் பருப்பு வாங்குவது மிகவும் அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. எனவே, தங்கம் வாங்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. உளுத்தம் பருப்பை வாங்கி அதிர்ஷ்டத்தை தன்வசப்படுத்துங்கள்.

கும்பம்
சனி பகவானின் ஆளுமையில் உள்ள கும்ப ராசிக்காரர்கள் அட்சய திருதியை அன்று, கருப்பு எள் அல்லது ஆடைகளை வாங்கலாம். இதன்மூலம் அவர்கள் சனிபகவானின் பரிபூரண அருளை பெற முடியும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் அக்ஷய திருதியை அன்று மஞசள் நிற பொருட்கள் அல்லது மஞ்சள் தூள் வாங்கலாம். இதனால், குரு பகவானின் முழு அருளும் கிடைக்கப்பெற்று வாழ்வில் முன்னேறுவீர்கள்.

FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White
Recommended for You
FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹273
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க