ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இன்று இந்த கட்டுரையில் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். எந்த ஒரு வேலையைத் தொடங்குவதற்கு முன்பும் சகுனம், வாஸ்து சாஸ்திரம் போன்றவை பார்க்கும் பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. வீடு கட்டுவது தொடங்கி, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதை வரை அனைத்திற்கும் வாஸ்து சாஸ்திரம் சில வழிமுறைகளை கூறுகிறது. அப்படி தான் பெண்கள் செய்யக்கூடிய சிறு சிறு விஷயங்களும் வீட்டின் நன்மையை பாதிக்கக்கூடும். அப்படி, பெண்கள் செய்யக்கூடிய விஷயத்தால் பாதிப்பு ஏற்படக்கூடியவை பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த வீடும் தாய், துணைவி, அக்கா, தங்கை போன்ற பெண்களையே முதன்மையாக சார்த்திருக்கிறது. அதனாலேயே வாஸ்து சாஸ்திரத்தில் பெண்கள் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும், திருமணமான பெண்கள் செய்யக்கூடாதவை பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தவறுகள், அவர்களின் கணவரை நேரடியாக பாதிப்பதோடு, அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கவும் நேரிடலாம். எனவே திருமணமான பெண்கள் தவறுதலாக கூட அணியக் கூடாத சில விஷயங்களைப் பற்றி இன்று உங்களுக்குச் சொல்கிறோம்…
வெள்ளை நிற புடவை
திருமணமான பெண்கள் ஒருபோதும் வெள்ளை நிற புடவை அணியக்கூடாது. ஏனென்றால், அவற்றை அணிவது பெண்களுக்குள் எதிர்மறை சக்திகள் குடியேறத் தொடங்கிவிடும். அதுமட்டுமின்றி, வெள்ளை நிற புடவை அணிவதால், கணவனின் வாழ்க்கையில் நெருக்கடி மேகங்கள் போல் சூழ ஆரம்பித்துவிடும். அதனால் தான் பெண்கள் வெள்ளை நிறத்தில் புடவை அணிய கூடாது என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.
கருப்பு வளையல்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, திருமணமான பெண்கள் கருப்பு வளையல் அணியக்கூடாது. ஏனெனில் இந்த நிற வளையல்களை அணிவதால், பெண்கள் சனிபகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, திருமணமான பெண்கள் கருப்பு வளையல் அணிவதைத் தவிர்த்திடுவது நல்லது.
தங்க கொலுசு
திருமணமான பெண்கள் தங்கள் கால்களில் தங்கக் கொலுசு அணிவதைத் தவிர்த்தே ஆக வேண்டும். கொலுசு பெண்களுக்கு பிடித்த ஒன்று தான். ஆனால், காலில் தங்க கொலுசு அணிவது அசுபமானது என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு காலில் தங்கத்தினால் ஆன கொலுசு அணிவது செல்வத்தின் அதிபதி குபேரனை கோபப்படுத்துமாம். இதனால், வாழ்வில் வறுமை ஆரம்பித்து, பல்வேறு வகையான பணப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமாம். எனவே, பெண்கள் கால்களில் எப்போதும் வெள்ளியினால் ஆன கொலுசு மட்டுமே அணிய வேண்டும். அது தான் நன்மை பயக்கும்.