Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

சிக்கன விட இந்த சைவ உணவு பொருட்கள்ல புரதச்சத்து அதிகமாவே இருக்கு...

A
Admin User
Journalist
March 01, 2022 5 min read 77 views
சிக்கன விட இந்த சைவ உணவு பொருட்கள்ல புரதச்சத்து அதிகமாவே இருக்கு...

புரதச்சத்து என்பது நமது உடல் தசைகளுக்கு வலு சேர்ப்பது மட்டுமின்றி, நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், போதுமான ஆற்றலை வழங்கிடவும் உதவுகிறது. பொதுவாக, அசைவ உணவுகளில் தான் புரதச்சத்து அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதிலும், குறிப்பாக முட்டை, கோழி இறைச்சி, மீன் போன்றவை புரதச்சத்தின் சிறந்த ஆதாரங்களாக திகழ்கின்றன. இதன் காரணமாக, சைவ பிரியர்கள் பலர் புரதச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிப்பதை அறிந்திருப்பீர்கள். எனவே, சைவ பிரியர்களுக்கு சிறந்த புரதச்சத்து ஆதாரங்களைப் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். அதிலும், சிக்கன் லெக் பீஸில் இருப்பதை காட்டிலும் புரதச்சத்து அதிகமாக இருக்கக்கூடிய 6 உணவுப் பொருட்களை இப்போது தெரிந்து கொள்வோம். ஹெல்த்லைனின் அறிக்கையின் படி, தோல் மற்றும் எலும்பு இல்லாத சிக்கன் துண்டுகளில் சுமார் 12.4. கிராம் அளவிற்கு புரதம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதை விட அதிக அளவில் புரதம் கொண்டுள்ள சைவ உணவுகளின் பட்டியல் இதோ…

பருப்பு வகைகள் - புரதச்சத்தின் சிறந்த ஆதாரமாக பருப்பு வகைகள் கருதப்படுகின்றன். ஒரு கப் வேகவைத்த பருப்பில் சுமார் 17.86 கிராம் அளவிற்கு புரதம் உள்ளது. இதில் நிறைய பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஃபோலோட் உள்ளது.

குதிரைவாலி அரிசி - உடலில் உள்ள புரதச்சத்து குறைபாட்டை சமாளிக்க குதிரைவாலியையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு கப் வேகவைத்த குதிரைவாலியில் சுமார் 14.53 கிராம் புரதம் உள்ளது.

வேர்க்கடலை - அரை கப் வேர்க்கடலையில் சுமார் 20.5 கிராம் அளவிற்கு புரதச்சத்து உள்ளது. எனவே, உடலுக்கு தேவையான புரதச்சத்தைப் பெற வேர்க்கடலையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

பாதாம் பருப்பு - அரை கப் பாதாம் பருப்பை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு 16.5 கிராம் புரதம் கிடைக்கும். தினசரி பாதாம் 4 முதல் 5 பாதாமை ஊற வைத்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

பச்சை பயறு - புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளில் பச்சை பயறும் ஒன்று. இதில், புரதத்துடன் இரும்பு சத்து, நார்ச்சத்து போன்றவையும் உள்ளன. ஒரு கப் வேக வைத்த பச்சை பயறில் சுமார் 14.18 கிராம் அளவிற்கு புரதச்சத்து காணப்படுகிறது.

பீன்ஸ் வகைகள் - பீன்ஸ் காய், கிட்னி பீன்ஸ், டபிள் பீன்ஸ் போன்ற பீன்ஸ் வகைகளிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது. ஒரு கப் வேக வைத்த பீன்ஸில் 12 முதலட 15 கிராம் அளவிற்கு புரதம் உள்ளது. எனவே, புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள் இதுபோன்றவற்றை தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் பட்சத்தில் புரதச்சத்து குறைப்பாட்டில் இருந்து விடுபடலாம்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க