Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

குளிர்காலத்தில் உதட்டு வறட்சியைத் தடுக்க உதவும் ஈஸி டிப்ஸ்!

A
Admin User
Journalist
January 31, 2023 1 min read 42 views
குளிர்காலத்தில் உதட்டு வறட்சியைத் தடுக்க உதவும் ஈஸி டிப்ஸ்!

Tips to prevent lip dryness in winter: மற்ற காலங்களை காட்டிலும், குளிர்காலத்தில் மட்டும் சரும பராமரிப்பிற்கு கூடுதல் கவனம் தேவைப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. குளிர்காலத்தில் நிலவும் வறண்ட காற்று சரும வறட்சி முதல் கூந்தல் வறட்சி வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

உங்கள் அன்றாட வாழ்வில் சிறு சிறு மாற்றங்களை செய்வது உங்கள் ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்திடும்.

குறிப்பாக, குளிர்காலத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சனை என்றால் அது உதட்டு வறட்சி தான். வறண்ட உதடு ஒருவரது அழகைக் கெடுக்கக்கூடும். எனவே, குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய உதட்டு வறட்சியைப் போக்க உதவும் சில எளிய குறிப்புகள் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

குளிர்காலத்தில் உதட்டு வறட்சியைத் தடுக்க உதவும் டிப்ஸ்

தண்ணீர்

உதடு வறண்டு போவதை தடுக்க உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். உதடுகளின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க, நிறைய தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். இது உடலுக்கும் நல்லது, உதட்டிற்கும் நல்லது.

எச்சில் வைக்காதீர்

வறட்சி அடையும் உதட்டை ஈரம் செய்கிறோம் எனும் பேரில் அனைவரும் உதடுகளில் அடிக்கடி எச்சில் வைக்கிறோம். ஆனால், அவை உதடுகளை மேற்கொண்டு வறட்சி அடைய செய்திடும்.

லிப் பாம்

ஈரப்பதமான உதடுகளை பெற வேண்டுமெனில், இரவு தூங்குவதற்கு முன்பு தரமான லிப் பாம் பயன்படுத்த வேண்டும். ஆல்கஹால் மற்றும் பாராபென் உள்ள லிப் பாம் பயன்படுத்துவதைம் தவிர்க்கவும்

எக்ஸ்ஃபோலியேட்

சருமத்தின் இறந்த செல்களை நீக்க எக்ஸ்ஃபோலியேட் செய்வதால், உதடுகளின் மென்மையை மீண்டும் கொண்டு வர முடியும். இருப்பினும், அளவிற்கு அதிகமாக எக்ஸ்ஃபோலியேட் செய்தால் அது தீங்கு விளைவிக்கும்.

வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ நிறைந்த உணவை அதிகம் சாப்பிடுவது, உதடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கேரட், பால் பொருட்கள் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளலாம். இவை உங்கள் உதட்டின் அழகை பாதுகாத்திட உதவும்.

உங்கள் உதடுகளை ஆரோக்கியமாக வைத்து கொள்வதன் மூலம், அவை உலராமல் தடுக்கலாம். ஆரோக்கியமான உணவை உண்பது உதடுகளை மட்டுமல்ல, உங்கள் சருமத்தையும் பளபளப்பாக மாற்றும்.

உங்கள் உதட்டின் அழகை மேம்படுத்த விரும்புபவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை தவறாமல் பின்பற்றினாலே போதும்.

முகத்தில் வழியும் எண்ணெய் பசையைப் போக்க தேனுடன் இதை கலந்து யூஸ் பண்ணுங்க…

வேப்பிலையை இப்டி யூஸ் பண்ணா எப்படிப்பட்ட முகப்பரு பிரச்சனையையும் சரி செஞ்சுடலாம்…

சரும வறட்சி முதல் கருவளையம் வரை அனைத்தையும் சரி செய்ய இது ஒன்று போதும்…

Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)
Recommended for You
Casio Youth Series Digital Black Dial Unisex Watch - F-91W-1Q(D002)

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க