Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
அழகு குறிப்புகள்

கோடைகால கூந்தல் வறட்சியைத் தடுக்க தேன் கூட இத யூஸ் பண்ணி பாருங்க...

A
Admin User
Journalist
April 28, 2022 1 min read 25 views
கோடைகால கூந்தல் வறட்சியைத் தடுக்க தேன் கூட இத யூஸ் பண்ணி பாருங்க...

கோடைகாலத்தில் சுட்டெரிக்கும் வெயில், மாசு மற்றும் வியர்வை காரணமாக கூந்தல் மிகுந்த சேதத்திற்கு உள்ளாகக்கூடும். இதன் காரணமாக கூந்தல் மிருதுவான தன்மையை விடுத்து வறண்டு, கரடுமுரடானதாக மாற தொடங்கிடும். இதனால், கூந்தல் உதிர்வு, வெடிப்பு, பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக தொடங்கும். ஆனால், இதிலிருந்து விடுபட ஆசைப்பட்டு ரசாயனம் நிறைந்த அழகு சாதன பொருட்களை வாங்கி பலரும் உபயோகிக்கின்றன. உண்மையை கூற வேண்டுமென்றால், இந்த ரசாயன பொருட்கள் அனைத்தும் முடியை பாதுகாப்பதற்கு பதிலாப சேதத்தையே மேலும் ஏற்படுத்துகின்றன. எனவே, உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இயற்கையான முறையில் பராமரிப்பது ஒன்று தான் இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான வழி என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். சரி இப்போது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சுலபமான முறையில் கூந்தலை கோடை வெயிலில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

முட்டை, தேன் மற்றும் தயிர்

ஆரோக்கியமான கூந்தலுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துவது சிறந்தது. இதைச் செய்ய, முதலில், ஒரு சிறிய கிண்ணத்தை ஒரு முட்டை உடைத்து ஊற்றி கொள்ளவும். அத்துடன், ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தயாரித்த இந்த ஹேர் மாஸ்கை, உச்சந்தலை முதல் முடியின் அடி நுனி வரை தடவவும். சுமார் ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் லேசான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிடவும்.

தேங்காய் எண்ணெய்

உங்கள் தலைமுடி பராமரிப்பதற்கான மிக சுலபமான வழி தான் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது. ஆம், சூடான தேங்காய் எண்ணெயைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்வது கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையில் எழுந்து தலையை அலசிடவும். நீங்கள் விரும்பினால், தேங்காய் எண்ணெயுடன் கூடுதலாக, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது ஜோஜோபா ஆயில் சேர்த்து பயன்படுத்தலாம். வாரம் இருமுறை இதை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆலிவ் எண்ணெய், ஆப்பிள் வினிகர் மற்றும் முட்டை வெள்ளைக் கரு

ஆப்பிள் சைடர் வினிகர் உங்கள் தலையை சுத்தமாக வைத்திருக்க உதவும். இது உங்கள் தலைமுடியை ரசாயனங்கள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்கிறது. முட்டையின் வெள்ளைக்கரு உங்கள் தலைமுடி பிரச்சனைகளை போக்க உதவிடும். மேலும், இது முடியை பளபளப்பாக்குகிறது. இந்த ஹேர் பேக்கை தயாரிக்க நீங்கள் ஒரு கிண்ணத்தில் மூன்று முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதில் சிறிது ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கவும். அதன் பிறகு, அதை நன்கு கலந்து உச்சந்தலை முதல் நுனி முடி வரை தடவவும். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு, பின் லேசான ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

வாழைப்பழம் மற்றும் கற்றாழை

நன்கு பழுத்த இரண்டு வாழைப்பழங்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் பிசைந்து கொள்ளவும். இப்போது அதில் 3 தேக்கரண்டி கற்றாழை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது அதை உங்கள் முடியில் தடவிவ 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். அதன் பிறகு, லேசான ஷாம்பூவால் தலைமுடியை அலசிடவும்.

Boat 2025 Launch Rockerz Trinity Grande, 150H Battery, Hi Res Audio by LDAC, Dual Pair, ENx Tech, Stream Ad Free Music via App Support, Bluetooth Neckband, Wireless with Mic Earphones
Recommended for You
Boat 2025 Launch Rockerz Trinity Grande, 150H Battery, Hi Res Audio by LDAC, Dual Pair, ENx Tech, Stream Ad Free Music via App Support, Bluetooth Neckband, Wireless with Mic Earphones

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி?
வாசிக்க