Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆன்மீகம்

கொசு தொல்லை தாங்க முடியலையா? இத செய்யுங்க கொசு உங்க வீட்டு பக்கம் வரவே வராது...

A
Admin User
Journalist
April 05, 2022 1 min read 15 views
கொசு தொல்லை தாங்க முடியலையா? இத செய்யுங்க கொசு உங்க வீட்டு பக்கம் வரவே வராது...

கோடை காலம் வந்துவிட்டது. இந்த சீசனில் மாலை வேளையில் கொசுக்களின் தொல்லை ஆரம்பித்துவிடும். பெரும்பாலானோர் கொசுக்களால் மிகவும் சிரமப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், சிலர் கொசுக்களை விரட்ட சந்தைகளில் கிடைக்கும் ஸ்ப்ரே அல்லது சுருள்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த இரசாயனம் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் விரும்பினால், சில வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி கொசுக்களை சுலபமாக விரட்டிடலாம். இந்த கட்டுரையில் கொசுக்களை விரட்ட உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகளைப் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இவை நிச்சயமாக உங்களுக்கு உதவிய இருக்கும் என்று நம்புகிறேன்…

துளசி
துளசியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. வீட்டிற்குள் வரும் கொசுக்களை துளசி செடி விரட்டும் என்பது ஐதீகம். எனவே, நீங்கள் துளசியின் சாற்றை பயன்படுத்துவதன் மூலம் கொசுக்களை விரட்டிடலாம். துளசி சாற்றை உடலில் தேய்த்து கொண்டால் கொசுக்கள் உங்களைக் கடிக்காது.

எலுமிச்சை புல் (Lemon grass)
எலுமிச்சை புல்லின் வாசனை நமக்கு ஒருவித புத்துணர்ச்சியை வழங்குவதோடு, வீட்டையும் நறுமணமாக வைத்து கொள்ள உதவும். அதுதவிர, இதன் மயங்க வைக்கும் நறுமணம் கொசுக்களை விரட்டிடும்.

சாமந்தி
சாமந்தி பூக்கள் வீட்டையம், பூஜை அறையையும் அழகாக்குவது மட்டுமல்லாமல், கொசுக்களையும் விரட்டும். உண்மையில், அதன் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது. எனவே, வீட்டை சாமந்திப்பூ கொண்டு அலங்கரிப்பதன் மூலம் கொசு மட்டுமின்றி, பல வகையான பூச்சிகளிலிருந்தும் உங்கள் வீட்டையும், வீட்டில் உள்ளவர்களையும் பாதுகாத்திடும்.

கற்பூரம்
கற்பூரத்தை பெரும்பாலும் வழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், உண்மையில் கற்பூரத்திற்கு கொசுக்களை விரட்டும் சக்தியும் உண்டு. அதற்கு, நீங்கள் கற்பூரத்தை ஏற்றும் போது, ​​வீட்டின் அனைத்து ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவிடவும். பின்னர், சிறிது நேரம் கழித்து கதவுகளைத் திறக்கவும். இவ்வாறு செய்வதால் கொசுக்கள் ஒழிந்திடும். மற்றொரு வழியும் உண்டு, அதற்கு ஒரு கப் தண்ணீரில் 4 முதல் 5 சூடங்களை பொடித்து போட்டு அதனை வீட்டின் மூலைகளில் ஆங்காங்கே வைக்கவும். அப்படி செய்வதால் வீடு புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, கொசுக்களையும் விடிட்டிடும்.

சுத்தம் செய்தல்
கோடை காலத்தில் நாம் வசிக்கும் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் சுத்தமான இடத்தில் கொசுக்கள் வருவது குறைவு. குப்பைகள் நிறைந்த இடங்களில் கொசுக்கள் அதிகம் சேரும். எனவே, வீட்டில் குப்பை நிறைய சேர விடாமல் அவ்வபோது அகற்றிட மறவாதீர்கள்.

FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White
Recommended for You
FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி?
வாசிக்க