Monday, February 09, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்த இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க...

A
Admin User
Journalist
May 20, 2022 1 min read 25 views
வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்த இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க...

வயிற்றுப்போக்கு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகி விட்டது. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், சுகாதாரமின்மை, நோய்தொற்று போன்றவற்றால் ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடலின் நீர்ச்சத்து முழுவதுமாக குறைந்த உடல் மிகவும் சோர்வடையும். இந்த பிரச்சனையை மட்டும் ஒருபோதும் அலட்சியமாக எடுத்து கொள்ள கூடாது. வயிற்றுப்போக்கை உடனடியாக நிறுத்த முயற்சிக்க வேண்டியது அவசியம். இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு ஒரு இடத்தில் நிம்மதியாக உட்கார கூட முடியாது. எனவே, இதுபோன்ற பிரச்சனையை சந்திக்க நேரிடும் போது சில எளிய வீட்டு வைத்தியங்களை உடனடியாக முயற்சிக்க வேண்டியது அவசியம். இப்போது இந்த கட்டுரையில், வயிற்றுபோக்கு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் வயிற்றுப்போக்கை சரி செய்திட உதவும் எளிய வீட்டு வைத்தியங்களைப் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்…

வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்

கடுமையான மற்றும் தொடர்ச்சியான வயிற்றுப்போக்குக்கான பொதுவான காரணங்கள் தொற்றுகள், செரிமான கோளாறு, சுகாதாரமற்ற உணவுகள், சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள். வைரஸ் தொற்றுகளாலும் வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். நோரோவைரஸ் இணைப்பு மற்றும் ரோட்டா வைரஸ் இணைப்பு உட்பட பல வைரஸ்கள் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. கடுமையான வயிற்றுப்போக்கிற்கு வைரஸ் இரைப்பை குடல் அழற்சி ஒரு பொதுவான காரணமாகும். இது தவிர, திரவ உணவு, உணவு சகிப்புத்தன்மை, மன அழுத்தம், பதட்டம் அல்லது மலமிளக்கியின் பயன்பாடு ஆகியவையும் காரணங்களாக இருக்கக்கூடும்.

வயிற்றுப்போக்கிற்கான வீட்டு வைத்தியங்கள்

உப்பு சர்க்கரை கரைசல்

வயிற்றுப்போக்கு ஏற்பட்ட உடனே அதற்கான உடனடி கை வைத்தியமாக கூறப்படுவது உப்பு சர்க்கரை கரைசல். இந்த கரைசலை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் பலவீனத்தை நீக்கிடலாம். மேலும் வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் இது மிகவும் உதவியாக இருக்கும். இதற்கு, ஒரு டம்ளர் தண்ணீரில் சமஅளவு உப்பு மற்றும் சர்க்கரையை சேர்த்து கலந்து உடனே குடித்திடவும். இது உங்கள் உடலில் குறைந்திருக்கும் நீர்ச்சத்தை சரிசெய்திட உதவும்.

எலுமிச்சை சாறு

குடலை சுத்தம் செய்ய எலுமிச்சை சாறு மிகவும் உதவியாக இருக்கும். மேலும், இது உங்கள் வயிற்றுப்போக்கை தடுக்க பெரிதும் உதவும். இதற்கு, நீங்கள் ஒரு கப் தண்ணீரில் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு நாளைக்கு மூன்று வேளையும் அதாவது காலை, மதியம் மற்றும் மாலை என பருகவேண்டும். பலருக்கு வலியுடன் கூடய வயிற்றுப்போக்கு அல்லது இரத்த கசிவுடன் கூடிய வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எலுமிச்சை ஜூஸ் குடிப்பது இவற்றிற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

சீரக தண்ணீர்

வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் சீரக தண்ணீரை குடிப்பது சிறந்த நிவாரணம் அளிக்கும். ஒரு டீஸ்பூன் சீரகத்தை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும். தண்ணீரை கொதித்து பாதி அளவாக குறையும் வரை கொதிக்க வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதன் பிறகு, அதை சிறிது சிறிதாக உட்கொள்ளுங்கள். வயிற்றுப்போக்கைத் தடுக்க இது ஒரு சிறந்த வழியாகும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. பொட்டாசியமானது உடலின் எலக்ட்ரோலைட்டுகளின் பற்றாக்குறையை ஈடுசெய்ய உதவுகிறது. வயிற்றுப்போக்கு காரணமாக உடலில் எலக்ரோலைட்டுகளின் அளவு குறைய தொடங்கும். எனவே, அதுபோன்ற நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடுவது உடல் சோர்வை நீக்குவதோடு, வயிற்றுப்போக்கையும் தடுக்க உதவும்.

FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White
Recommended for You
FLYNGO Touch Control LED Night Light Table Lamp for Bedroom, Living Room, and Study, with Adjustable Brightness, USB Rechargeable (A1)Plastic ,White

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,543
தங்கம் (24k)
1 கிராம்
₹15,864
வெள்ளி
1 கிராம்
₹274
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

மன அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
நல்ல உறக்கம்: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான ஆதாரம்
வாசிக்க