Sunday, May 10, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

குளிர்காலத்தில் கட்டாயம் உணவில் சேர்க்கப்பட வேண்டிய காய்கறிகள்!!!

A
Admin User
Journalist
January 13, 2022 6 min read 93 views
குளிர்காலத்தில் கட்டாயம் உணவில் சேர்க்கப்பட வேண்டிய காய்கறிகள்!!!

குளிர்காலம் என்பது நம் அனைவருக்குமே பிடித்தமான காலம். ஏனென்றால், குளிர்காலத்தில் அதிகம் வியர்காமல் குளுகுளு காற்றை அனுபவிக்க முடியும். ஆனால், குளிர்காலத்தில் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க சிறந்த வழி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உட்கொள்வது தான். இந்தியாவை பொறுத்தவரை சில குறிப்பிட்ட காய்கறிகளை குளிர்காலத்தில் சேர்த்து கொள்வது மிகுந்த பயனளிக்கும். குளிர்காலத்தில் எந்தெந்த காய்கறிகளை சாப்பிடலாம் என்ற உங்களது கேள்விக்கான பதில் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய காய்கறிகளை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்…

கீரை வகைகள்

அனைத்து கீரை வகைகளுமே குளிர்காலத்திற்கு ஏற்ற காய்கறி வகையை சேர்ந்தது. குளிர்காலத்தில் பல ஆரோக்கிய நன்மைகளை கீரைகள் அளிக்கக்கூடியது. இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ, கே, ஜிங்க், மெக்னீசியம் மற்றும் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், பார்வை இழப்பைத் தடுக்கவும், ஹீமோகுளோபினை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். இது இந்தியாவில் குளிர்காலத்தில் சாப்பிடக்கூடிய அற்புதமான காய்கறிகளில் ஒன்றாகும்.

கேரட்

கேரட் எப்போதும் குளிர்கால உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் வைட்டமின்கள் ஏ, பி, பி2, பி3, சி, கே மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளன. மேலும், கேரட் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அதிலிருந்து மீளவும் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், அவை சரியான குளிர்கால உணவாக அமைகிறது மற்றும் உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும்.

பீட்ரூட்

கேரட்டை போல் பீட்ரூட்டும் பெரும்பாலும் குளிர்காலத்தில் உண்ணப்படுகிறது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி6 மற்றும் சி ஆகியவை உள்ளன. பீட்ரூட்கள் குளிர்காலத்தில் உண்ணக்கூடிய சிறந்த காய்கறிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவை கல்லீரலை நச்சை நீக்கவும், நீரிழிவு அபாயத்தைக் குறைக்கவும் உதவும். உட்கார்ந்தபடியே வேலை செய்வதால் ஏற்படக்கூடிய உடல் பருமனை எதிர்த்துப் போராடவும் பீட்ரூட் உதவுகிறது.

வெள்ளை முள்ளங்கி
வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் பிரபலமான குளிர்கால காய்கறி என்றால் அது வெள்ளை முள்ளங்கி தான். வெள்ளை முள்ளங்கியில் பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் உள்ளது. மேலும், இது குறைந்த கலோரி மதிப்பையும், அதிக நீர் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. இது குளிர்காலத்தில் உடலில் நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இந்த சத்துக்கள் உங்கள் உடல் காய்ச்சல் போன்ற நோய்களை எதிர்த்து போராட உதவும் என்பதால், உங்கள் உணவில் சேர்க்க இது ஒரு சிறந்த குளிர்கால காய்கறி.

ப்ரோக்கோலி
குளிர்காலத்தில் சாப்பிட சிறந்த காய்கறிகளின் பட்டியல் ப்ரோக்கோலி இல்லாமல் பட்டியலானது முழுமையடையாது. ப்ரோக்கோலி ஆரோக்கியமான பச்சை காய்கறிகளில் ஒன்றாகும். ஏனெனில் அதில் கால்சியம், துத்தநாகம், செலினியம், ஃபோலேட், வைட்டமின்கள் பி6, பி12, சி மற்றும் கே ஆகியவை உள்ளன. மேலும், அதிக நார்ச்சத்து கொண்ட ப்ரோக்கோலி உங்கள் குடல் இயக்கத்தையும் எளிதாக்க உதவுகிறது. குளிர்காலத்தில் இதை சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் இந்த பருவத்தில் வளரும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உங்கள் உடலுக்கு உதவும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹14,150
தங்கம் (24k)
1 கிராம்
₹14,858
வெள்ளி
1 கிராம்
₹280
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நலமான வாழ்விற்கு எது மிக முக்கியம்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க