Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

தக்காளி அதிகமா சாப்பிட்டா இந்த பிரச்சனைலாம் வருமாம்…

A
Admin User
Journalist
January 09, 2022 4 min read 68 views
தக்காளி அதிகமா சாப்பிட்டா இந்த பிரச்சனைலாம் வருமாம்…

தக்காளி இல்லாமல் சமையல் என்பதே கிடையாது. பெரும்பாலான உணவு வகைகளில் இடம் பிடிக்கிறது. தக்காளியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. தக்காளியை பல வழிகளில் பலரும் உட்கொள்கின்றனர். பச்சையாக சாலட்டில் சேர்த்து சாப்பிடுவது, தக்காளி சூப், சாஸ், சட்னி என பல்வேறு வகைகளில் தக்காளி உட்கொள்ளலாம். இரத்தப்போக்கு பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியை நிச்சயம் தவிர்ப்பதே நல்லது. ஏனென்றால், தக்காளியை அதிகமாக சேர்ப்பதால் இந்த 4 நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவற்றை பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ளப்போகிறோம்…

செரிமானம் மற்றும் வாயு பிரச்சனை
அதிக அளவில் தக்காளியை சேர்த்துக் கொண்டால், இரைப்பை அமிலம் அதிகமாக சுரக்கும். அது நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். செரிமான பிரச்சனை உள்ளவராக இருந்தால், தக்காளி அதிகம் சேர்த்துக் கொள்வதை முதலில் நிறுத்துங்கள். இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் தக்காளி உட்கொள்வதை குறைக்க வேண்டியது அவசியம்.

சிறுநீரக கோளாறு
சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியிடம் இருந்து சற்று விலகி இருப்பதே நல்லது. உண்மையில், அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் கூற்றின்படி, தக்காளியில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தக்காளியை உட்கொள்ளக்கூடாது.

மூட்டு வலி
பொதுவாகளே, மூட்டு வலி மற்றும் அழற்சி பிரச்சனை உள்ளவர்கள் தக்காளி சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறுவது உண்டு. ஏனென்றால், தக்காளியில் அல்கலைன் அதிகமாக உள்ளது. அது, மூட்டுகளில் வலியை அதிகரிக்கச் செய்துவிடும். அதுமட்டுமல்லாது, தக்காளியில் உள்ள சாலனைன், மூட்டு திசுக்களில் கால்சியத்தை உற்பத்தி செய்திடும். அதனால், மூட்டுகளில் வலியும், வீக்கமும் அதிகரிக்கக் கூடும்.

சரும அழற்சி
தக்காளியை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் லைகோபெனோடெர்மியா எனும் சரும பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். லைகோபெனோடெர்மியா என்பது உடலில் லைகோபெனின் அளவு அதிகரிக்கும் போது உண்டாகக்கூடயது. இநத பிரச்சனை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடும். நாளொன்றிற்கு ஒருவர் 75 மில்லிகிராம் அளவிற்கு தான் லைகோபென் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் அதிகமாக எடுத்துக்கொண்டால் உடலில் ரேஷஸ் ஏற்படக்கூடும்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க