Thursday, March 26, 2026
Logo
Menu
Follow Us
ஆரோக்கியம்

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க தினமும் வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க...

A
Admin User
Journalist
May 09, 2022 6 min read 66 views
நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க தினமும் வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க...

காலையில் வெறும் வயிற்றில், சத்தான மற்றும் புரதச்சத்து நிறைந்த பொருட்களை காலை உணவாக உட்கொள்ள வேண்டும். அப்போது தான் அன்றைய தினம் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் செயல்பட முடியும். ஏனென்றால், காலையில் நம் வயிறு காலியாக இருப்பதால், அன்றைய முதல் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படி சாப்பிடுவதால் உங்கள் உடலில் அனைத்து சத்துகளும் எளிதாக உறிஞ்சப்படும். எனவே, உங்கள் தினந்தோறும் உற்சாகத்துடன் வைத்திருக்க வெறும் வயிற்றில் சில உணவுகளை உட்கொள்வது பெரிதும் உதவும். இப்போது இந்த கட்டுரையில் அந்த உணவுகளைப் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்…

காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள்

பாதாம்

பாதாமில் மெக்னீசியம், வைட்டமின் ஈ, புரதம், நார்ச்சத்து, ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பாதாம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலை எழுந்ததும் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும், பாதாமின் தோலை உரித்துவிட்டு, சாப்பிடவும். இவ்வாறு சாப்பிட்டால், அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள்.

கற்றாழை

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையோ அல்லது வயிறு தொடர்பான வேறு பிரச்சனைகள் இருந்தாலோ, வெறும் வயிற்றில் கற்றாழை சாற்றை உட்கொள்ளலாம். இந்த ஜூஸை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டால் வயிறு சுத்தமாகும். இதனால், அன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக அமையும்.

சியா விதைகள்

சியா விதைகள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள ஆயுர்வேத மூலிகைகள். இதில் வைட்டமின்கள், புரதங்கள், தாதுக்கள், நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் சில அமினோ அமிலங்கள் உள்ளன. சியா விதைகளை வெறும் வயிற்றில் உட்கொள்வது நன்மை பயக்கும். இதை இரவு தூங்கும் முன்பு, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அல்லது 15 கிராம் சியா விதைகளை ஊற வைக்கவும். இதை காலை எழுந்து சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

பப்பாளி

பப்பாளி பழத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறி வயிறு சுத்தமாகும். பப்பாளி பழம் சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தர்பூசணி

கோடையில் காலை உணவாக தர்பூசணி சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். உண்மையில், தர்பூசணி உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். மேலும், அதை சாப்பிடுவது இனிப்பு சாப்பிடும் ஆசையையும் குறைத்திடும். இந்த கோடை வெயிலை எதிர்கொள்ள காலை உணவாக தர்பூசணி பழத்தை எடுத்து கொள்ளுங்கள்.

உலர் திராட்சை

திராட்சையில் அதிக அளவு பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. பாதாம் பருப்பைப் போலவே, உலர் திராட்சையையும் இரவு தூங்கும் முன்பு தண்ணீரில் ஊற வைக்கவும். இப்படி செய்வதால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்கிறது. உலர் திராட்சையில் இயற்கையான இனிப்பு சுவை உள்ளது. எனவே, அதை காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நாள் முழுவதும் உங்களுக்கு ஆற்றலைத் தரும்.

சூடு நீர் மற்றும் தேன்

தேனில் தாதுக்கள், வைட்டமின்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் குடலை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீருடன் தேன் கலந்து குடிப்பது காலை நேர சோம்பலை அகற்றி, புத்துணர்ச்சியை அளித்திடும். இதற்கு தினமும் காலையில் எழுந்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கலாம்.

Share this article
A
Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

...

உடல் எடை கணக்கீடு

ஆரோக்கியமான வாழ்விற்கு உங்கள் பிஎம்ஐ (BMI) அளவை அறிந்து கொள்வது அவசியம்.

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

...

...

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,670
தங்கம் (24k)
1 கிராம்
₹14,354
வெள்ளி
1 கிராம்
₹260
அடுத்த பண்டிகை (Next Festival)

தேடல்...

00
Days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

Get Daily Updates

Subscribe for the latest news in your inbox.

அடுத்து வாசிக்க
ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்!
வாசிக்க